பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 திருக்கோட்டியூர் எந்தை வாய் வைத்துப் பருகிக் களிக்கும் என்று கூறி மகிழ்வர். சோலைகளிலுள்ள உயர்ந்த பலா மரங்களில் வருக்கைப் பலாப் பழங்களும், மாமரங்களில் தேமாங்கனிகளும், வாழைத்தோட்டங்களில் திரண்ட வாழைப்பழங்களும் நிறைந்து அவற்றின் மணமும் நம் மூக்கைத் துளைப்பது போன்ற உணர்ச்சியைப் பெறுகின்றோம். சோலைகளில் நெருங்கிய கிளைகளில் தங்கியுள்ள குயில்கள் கண்ணபிரா னின் சீர்மைகளைப் பாடுவதாக உணர்ந்து மகிழ் கின்றோம். இங்ங்னம் இயற்கைக் காட்சிகளில் மனம் ஈடுபட்டுள்ள போது நாம் ஏறியிருக்கும் பேருந்து கோயிலுக்கு அருகில் வந்து நிற்கின்றது. ஊரினுள்ளும் நறுமணத்திற்குக் குறைவில்லை. மலை முல்லைப் பூக்களின் நறுமணத்தையும், சமநிலத்திலுள்ள கொடி மல்லிகையின் இனிய மணத்தையும் முகந்து கொண்டு வரும் தென்றல் ஊரிலுள்ள விதிகளிலும் *கம்’ என்று மனத்தைப் பரப்பி நிற்கின்றது." இங்ங்னமே சீரும் சீறப்பும் மிக்க, செந்நெலார் வயலும் வண்ணமாடங் களும் சூழ்ந்த திருக்கோட்டியூரின் மீது நம் கண் வட்டத்தைச் செலுத்துகின்றோம். இப்பொழுது உள்ள ஊர் மிகவும் சிறிய ஊரே. ஆழ்வார் காலத்து ஊரை நாம் அவர் பாசுரங்கள் மூலம் காண்கின்றோம். புரூரவன் என்னும் அரசன் கங்கை நீராடத் தேரின்மீதேறிச் செல்லுங்கால் கதம்ப முனிவரின் ஆசிரமத்திற்கருகில் அவன் இவர்ந்து வந்த தேர் மேல் செல்ல இயலாதபடி தடுத்து நிறுத்தப்பெற்றது. அரசன் தேரினின்றும் இறங்கிக் கதம்ப முனிவரை வணங்கினான். பின் அவர் விருப்பப்படி இத்தலத்தில் அந்தணர் குடியிருப்பை (அக்கிரகாரம்) உண்டுபண்ணுவதாக வாக்களித்தான். அங்ங்னமே, கங்கைக் கரையிலிருந்த ஆயிரத்து ஐந்நூறு பாகவதர்களை அழைத்துக் கொண்டு வந்து நகர் அமைத்து அவர்களைக் குடியேறச் செய்தான் என்பது புராண வரலாறு. 9. பெரியாழ். திரு. 4, 4 : 9 10. பெரி.திரு. 9. 10 : ?