பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பெருமான்) பின்பு அவளை வெளிப்படையாக மணஞ் செய்துகொள்ளும் பொருட்டுப் பொருள் தேடி வருவதற் காகப் பிரிகின்றான். குறித்த காலத்தில் வருவதாகச் சொல்லிப்போனவன் வரவில்லை. அந்நிலையில் அவன் பிரிவினை ஆற்றமாட்டாது மிகவும்வருந்துகின்றாள் தலை மகள். இந்நிலையில் தலைமகளைக் காணும் செவிலித் தாயார் அவளது வடிவு வேறுபாட்டை நோக்கி, இவள் இங்ங்னம் மெலிவதற்குக் காரணம் என்னோ?’ என்று கவலையுற்றுக் கட்டுவிச்சியைக் குறி கேட்கின்றனர். அவளும் தன் குலமரபுப்படி நெல் முதலியவை கொண்டு ஆராய்ந்து 'இவளுக்கு முருகக் கடவுள் ஆவேசித்த தொழியப் பிறிது ஒன்றும் இல்லை என்று கூறுகின்றாள். அதுகேட்ட செவிலித்தாயர் உடனே தலைமகள் பக்கல் தமக்கு உள்ள அன்பின் மிகுதியால் வேலனைக்கொண்டு வெறியாட்டயரத் தொடங்குகின்றனர். நோய் ஒன்றும் மருந்தொன்றுமாதலால் தான் காதலித்த புருடோத்தம ாைன தலைமகனது தகுதிக்கு ஏலாத அச்செயலை நோக்கித் தலைமகள் மேன்மேலும் வருந்துகின்றாள். அவளது துன்பத்தின் உண்மைக் காரணத்தை உணர்ந்த அவள் ஆருயிர்த்தோழி அச்சமயத்தில் செவிலியரை நோக்கி வெறி விலக்கித் தலைமகளது துன்பத் தின் உண்மைக் காரணத்தை உணர்த்துவதாக அமைந்த துறை இது. நாமும் தலைமகளின் நிலை எய்தி வரகுண மங்கை எம்பெருமானைக் காதலிப்பதாகப் பாவனை செய்து கொண்டு வழிபடுகின்றோம். பரிபூரண பிரம்மாறு பவம் பெற்ற நிலையில் திருக்கோயிலை விட்டு வெளி வரு கின்றோம். திருக்குளந்தை என்னும் திவ்வியதேசத்துக்குச் செல்லச் சித்தமாகின்றோம்.