பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் தேனக்குடலம் வேறான தன்மை உணரான் மனக்கவலை தீர்ந்துய்ய மாட்டான்-கினைக்கின் திருக்குளங்தை யாருரைத்த சீர்க்கீதை பாடும் தருக்குளங்தை யாமல் இருக் தால்.’ (தனக்கு-(ஆன்மாவாகிய தன்னைக் காட்டிலும்; உடலம்-உடம்பு; உய்தல்-நற்கதி அடைதல்; நினைக்கின். ஆராயுமிடத்து; திருக்குளத்தையார். எம்பெருமான்; சீர் கீதை- சிறப்பான பகவத் கீதை: தருக்கு-மனக் களிப்பு; உளம்-ஒருவனது உள்ளத்தில், தையாமல்-பதியாமல்; என்பது பாசுரம். கண்ணன் அருளிய கீதையைப் படித்து அதன் பொருளை மனத்திற்கொண்டு ஆனந்தம் அடைபவரே ஆன்மாவேறு. உடல் வேறு என்ற தத்துவ உணர்ச்சியால் மனக்கவலை தீர்ந்து வாழ்வர் என்ற உண்மையையும் சிந்திக்கின்றோம். அடுத்து திருப்புளிங்குடி என்ற திவ்விய தேசத்தை நோக்கிப் பயணமாகின்றோம். 29. நாற். திருப். அந்-56