பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் துணையும் சார்வுமாகக் கூறிய சுற்றத்தவர் உண்மையில் ஒருவர் கூட இல்லை. அப்படி இருப்பதாகக் காட்டிக் இாள்பவர்கள் இருப்பதை ஆகுவார்போல்’ என்பதால் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இவர்கள் அணுகாமலும் இரார். இவர்கள் இரட்சகர்கள்’ என்று கண்டோர் பிரமிக்கும்படி மிகவும் நெருங்கியும் இருப்பர். இப்படி இவர்கள் நெருங்கி இருப்பதற்குக் காரணம் என்ன? கைக்கு எட்டும்படியான செல்வம் இருக்குமேயானால் அதனைப் பசையற இரத்தத்தைக் கவர்ந்து குடிக்கும் அட்டைகள் போல் கவர்ந்து கொள்வதற்காக. பைத்தியக்காரனைச் சுற்றிப் புத்துப்பேர் - பணக் காரனைச் சுற்றிப் பத்துப் பேர்’ என்பது உலகியலைப் பளிங்குபோல் காட்டும் ஒரு பழமொழி. இதனை விளக்குவதுபோல் ஆழ்வார், "பொருள்கை யுண்டாய்ச் செல்லக் கர்ணில் போற்றியென் றேற்றெழுவர் இருள்கொள் துன்பத் தின்மை காணில் என்னே என் பாருமில்லை” |போற்றி-புகழ்ந்து, எழுவர்-ஆகல்வர் இருள்-அஞ் ஞானம்; இன்மை-வறுமை-) என்று பாசுரம் அமைக்கின்றார். இதனை யெல்லாம் நன்கு உணர்ந்த ஆழ்வார் எம்பெருமானே உண்மையான பந்து என்று அறுதியிட்டு அவனையே சார நினைக்கின்றார். தான் ஆன்மாக்களின் பந்து என்பதை நிலை நாட்டும் பொருட்டே எம்பெருமான் திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருக்கின்றான். இதனை எண்ணியே ஆழ்வார் திருப்புளிங்குடி எம்பெருமானைச்சென்று கிட்டுகின்றார். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் முகிழ்த்த வண்ணம் திருக்குளந்தையிலிருந்து திருப்புளிங்குடியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். இது நவதிருப்பதி களுள் நான்காவது தலம்.சீவைகுண்டம்என்னும் இருப்பூர்தி 2. திருவாய் 9, 1 : 2