பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடிக் காய்சின வேந்தன் 327 நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவிலுள்ளது இத் திவ்விய தேசம். நம்மாழ்வார் எவ்வளவு ஆர்வத்துடன் அங்குச் சென்றாரோ அந்த ஆர்வத்தில் நாமும் செல்வ தாகப் பாவித்துக்கொண்டு செல்லுகின்றோம். நம் வாகனத்தைச் சாலை யோரத்தில் நிறுத்திவிட்டுத் திருக் கோயிலை நோக்கி நடக்கின்றோம், தேவரீரும் பிராட்டிமாரும்கூட எழுந்தருளியிருக்கும் இருப்பை அடியேனுக்குக் காட்டியருள வேணும்; அடியேனைக் கண்டவுடன் அடியேன் முன்னே நாலடி உலாவியருன வேணும்; புன்முறுவல் காட்டி அருள வேணும்; ஒரு வார்த்தை அருளிச் செய்யவேணும் என்று ஆழ்வார் தம்முடைய மனோரதங்களையெல்லாம் விண்ணப்பம் செய்கின்றார். அவற்றையெல்லாம் எண்ணிய வண்ணம் திருக்கோயி லுக்குள் நுழைகின்தோம். கிடந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கும் காய்சின வேந்தனை வணங்குகின்றோம். ‘என்றைக்கு இங்கு திருக்கண் வளர்த்தருளப் புகுந்தானோ அன்று முதல் இன்று வரை ஆடாமல் அசையாமல் சயனித் திருக்கின்றானே! இஃது என்ன சிரமமோ?’ என்று ஆழ்வார் நினைந்து இட்ட, 'கொடியார் மாடக் கோளுர் அகத்தும் புளிங்குடியும் மடியா தின்னே துேயில் மேவி மகிழ்ந்துதான் அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல், இப் படிதான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே: |மடியாது-இடம் வலம் கொள்ளாமல்; இன்னே-இன்று காண்பதுபோலவே, மேவி-விரும்பி, அல்லல்-துன்பம்; அசைவு-அயர்ச்சி, பணியாய்-கூறியருள வேண்டும்.) 3. திருவாய் 8, 3 : 5