பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடிக் காய்சின வேந்தன் 2:29 'பண்டைகா ளாலே கின்திரு வருளும் பங்கயத் தாள்திரு வருளும் கொண்டுகின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடி குடி வழிவந்தாட் செய்யும், தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய், தெண்டிரைப் பொருகல் தண்பனை சூழ்ந்த திருப்புளிங் குடிக்கிடக் தானே." {பங்கயத்தாள் - பெரிய பிராட்டியார்; சீய்த்து - திருவல கிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் போன்ற செயல்களைச் செய்து; பல்படிகால் அநாதிகாலமாக; ஆள்செய்யும். அடிமை செய்யும்.) என்பது முதற் பாசுரம், வேறு புகலற்ற தன்னைக் குறித்து ஒருசொல் அருளிச் செய்து விடாய் தீரக் குளிர நோக்கி யருளுமாறு வேண்டுகின்றார் ஆழ்வார். வழி வழியாகக் கைங்கரியம் செய்யும் குடிவழி வந்தவராகத் தன்னைக் கருதுகின்றார். உன் தாமரைக் கண்களால் நோக்காய் : சொல்லில் தோற்றாத பற்றும் நோக்கிலே தெரியும்படிக் குளிர நோக்கி யருள வேண்டும் என்பது இதன் பொருள். இத் தொடர்பற்றிய ஒர் இதிகாசத்தை ஈண்டுச் சிந்திக் கின்றோம். திருவரங்கந்தில் பிள்ளை தேவப் பெருமாள ரையர் என்பார் இப் பாசுரத்தைச் சேவிக்கையில் உன் தாமாைக் கண்களால் நோக்காய்' என்று ஒரு தடவை சொல்லி நிறுத்தாமல் நோக்காய் நோக்காய்.........' என்று பலகாலம் சொல்லிக்கொண்டேயிருந்து மேலடி யில் போகமாட்டாது நின்றாராம். அப்போது கேட் போர் கூட்டத்தில் வீற்றிருந்த அவருடைய திருத் தகப்பனார் ஆழ்வார் திருவரங்கப் பெருமாளசையர் எழுந்திருந்து, பிள்ளாய், நீ எம்பெருமான் திருவுள்ளம் 5. திருவாய் 9, 2 : 1.