பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠露鲸 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் புண்படும்படி இங்ங்னம் பலகாலும் சொல்லி வலியுறுத் தலாமோ? அழகிய மிடற்றைத் தந்து, நல்ல பாட்டைத் தந்து, ஐசுவரிய சந்தானங்களையும் அவர் தந்தருளி யிருக்க, ஒன்றும் செய்யாதவராக நினைத்து இன்னமும் நோக்காய், நோக்காய்...... என்றால் இஃது என்னே! மேலே பாடுக” என்றாராம். அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் தம்முடைய சேஷத் துவப் பெருமையை எடுத்துக் காட்டுகின்றார். குடிக் கிடத்தல், ஆக்கஞ் செய்தல், தீர்த்த வடிமைக் குற்றே வல் செய்தல், பொன்னடிக் கடவாதே வழி வருதல் ஆகிய நான்கு சிறப்புகளைத் தமக்கு உள்ளனவாகக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். குடிக் கிடத்தல் என்பது: ஆலமரியாதை தப்பாதபடி இருத்தல். ஆக்கஞ்செய் தலாவது, குடியில் பண்டு இல்லாத நன்மைகளை உண்டாக்கிக் கொள்ளல். தீர்த்த அடிமைக் குற்றேவல் செய்தல் என்பது, அடிமைக் குற்றேவல் என்றும், தீர்த்த அடிமைக் குற்றேவல் என்றும் இரண்டு வகை யுண்டு. எம்பெருமான் திறத்துக் கைங்கரியம் பண்ணு வது அடிமைக் குற்றேவல். அப்போது உலக இன்பங் களிலும் மனம் ஈடுபட்டிருக்கும். அப்படியில்லாமல், தனது அடிமையாலே மற்றைப் பேறுகளில் நசையை அறவே அறுத்த அடிமைக் குற்றேவலே தீர்த்த அடி மைக்கு குற்றேவல் எனப்படும். பொன்னடிக் கடவாதே வ வருதல் என்பது, அத்யந்த பராதந்திரியத்திற்குச் சேர்ந்ததொரு வழிபாடு. இவற்றை எடுத்துக் காட்டிய ஆழ்வார், ‘'நீ ஒருநாள் படிக்கள வாக கிமிர்ந்தகின் பாத பங்கய மேதலைக் கணிவாய்’’’ [படி - பூமி, அளவாக தகுதியாக பாதபங்கயம் - திருவடித் தாமரை.) 6. திருவாய் 2. 2:2