பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பல்லாண்டு’ப் பதிகத்தில் குறிப்பிடும் தொண்டக் குலத்தை யும் நம்மை இங்கு நினைக்கச் செய்கின்றது. இதற்கு அடுத்த பாசுரம் புளிங்குடி, வரகுணமங்கை, சீவைகுந்தம் என்ற மூன்று தல எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்வது. அடுத்து, கசேந்திரனுக்குக் காட்சியளிப்பதுபோல் தனக்கும் பெரியதிருவடியின்மீது வந்து காட்சி தருமாறு வேண்டுகின்றார்.

கவளமா களிற்றின் இடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவையூர்த் தானே."

இடர்-துன்பம், காய்சினம்-வெவ்விய கோபம்; தடம் - பொய்கைக் கரை, ! என்ற விளியினால் இது விளங்கும். முன் பாசுரத்தில் பவளம்போல் கனிவாய் சிவப்பக் காண வரவேண்டும்’ என்று வேண்டினார். இங்கு மேலும் சில மனோரதங் களைத் தெரிவிக்கின்றார். பவளம்போல் கனிவாய் சிவப்பக் காணவந்து, அதற்குமேல் பன்னிலாமுத்தம் தவழ்கதிர் முறுவல் செய்யவேணும்; அதற்கு மேலே திருக்கண்தாமரை தயங்க நின்றருளவேணும்' என் கின்றார். பல்லாகின்ற நிலாமுத்து நிரையானது கதிர் உள்ளடங்காமலே புறம்பே தவழும்படி புன்முறுவல் செய்யவேண்டும் என்பது ஆழ்வாரின் ஆசை. அதற்கு மேலும் முந்துற நாலடிவந்து, பின்னும் அதுவும் மாட்டாது அசைவற்றவனாய் நிற்கும் நிலை காண வேண்டி நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்' என்று தம் பாரிப்பைத் தெரிவிக்கின்றார். அடுத்த பாசுரம் இத்திருத்தல எம்பெருமான் பெயர் கொண்டு இலங்குவது. 8 திருப்பல் - 5 9. இதன் விளக்கத்தை வரகுணமங்கை’ பற்றிய 18-வது கட்டுரையில் காண்க. 10. திருவாய் 9, 2 : 5