பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடிக் காய்சின வேந்தன் 233 'காய்சினப் பறவை பூர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல, மாசின மாலி மாலிமான் என்றங் கவர்படக் கனன்றுமுன் கின்ற காய்ச்சின வேந்தே கதிர் முடி யானே! கலிவயல் திருப்புளிங் குடியாய். காய்சின ஆழி சங்குவாள் வில்தண் டேக்தி.எம் இடர்கடி வானே!' 1.காய்சினம்-வெவ்வியகோபம்; மாசினம்-பெரியகோபம்; மான்மாலி-சுமாலி, கனன்று-சீறி, கதிர்முடி-கிரீடம், கலி வயல்-செழித்த வயல்; இடர்-துன்பம்} என்பது பாசுரம். இதில் எம்பெருமானைக் காய்சின வேங்தே என்று விளித்துப் பஞ்சாயுத ஆழ்வார்களுடன் கூடியிருக்கும் சேர்த்தியழகுடன் தம்முன் தோன்றித் தம் இடர் களையுமாறு வேண்டுகின்றார். திருப்புளிங்குடி எம்பெருமானின் திருநாமம் காய்சின வேந்தன்' என்றே ஈட்டாசிரியர் குறிப்பிடுகின்றார், காய்சின வேந்து எப் படியோ காசினிவேந்து என்றாகி அத்துடன் நில்லாமல் காசினி என்று பூமிக்குப் பெயராதலால் காசினி வேந்து’ என்ற தொடர் பூமிக்கு அரசன் என்று பெயர் களைப் பெற்று, இத்தலத்து எம்பெருமானைப் • பூமி பாலன்” என்ற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். இது சென்னையிலுள்ள ஹாமில்டன் வாராவதி” என்பது சாதாரண மக்கள் பேச்சு வழக்கில் 'அம்பட்டன் வாராவதி என்றாகி, இதுவே நாளடைவில் Barber's Bridge என்ற பெயராகி நாளடைவில் இப்பெயரே மாநகரப்பதிவேடுகளிலும் ஏறிவிட்ட கதை போலாயிற்று.”* திவ்வியப் பிரபந்தத்திலும் அதன் வியாக்கியானங்களிலும் 11. திருவாய் 9, 2:6 12. இப்போது இந்திய அரசியல் அமைப்பை வரைந்த டாக்டர் அம்பேத்காரின் திருநாமம் சூட்டப் பெற்றுள்ளது.