பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புளிங்குடி காய்சின வேந்தன் 235 பூணு நூலிடுவீர், பழம் உண்பீர், பால் பருகீர்’ என்றால் போல் சொல்லித் துதித்தல். இந்த இடத்தில் ஈட்டில் வாங்கிபுரத்து நம்பி விஜயஸ்ய என்ன, ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைப்பது என்றுள்ள ஐதிகத் கையும் சிந்திக்கின்றோம் : வங்கிபுரத்து நம்பி பெரு மாளைச் சேவிக்க எழுந்தருளினபோது ஒரு பக்கம் நீவைணவர்களும் மற்றொரு பக்கம் ஆய்ச்சிகளும் நின்று கொண்டு பெருமாளைச் சேவித்திருந்தார்களாம். வங்கிபுரத்து நம்பி வைணவர்கள் பக்கம் நிற்காமல் ஆய்ச்சிகள் பக்கம் நின்றாராம். அதை முதலியாண் டான் கண்டு இதென்ன? வைணவர்கள் திரளில் சேராமல் ஆய்ச்சிகள் பக்கமாக நிற்கிறதேன்?’ என்று கேட்டாராம். அதற்கு நம்பி, எப்படியும் நாம் பலவகை அபிமானம் கொண்டு அகங்கார மமகா யுக்தர்களாக இருப்போம். ஆகவே, எம்பெருமானின் கடாட்சம் பாய்வது மேட்டுமடை யாக இருக்கும். அறிவொன்று மில்லாத ஆய்ச்சியர்களோ உண்மையில் தாழ்ச்சியுடையவர்களாகவும் தாழ்ச்சி தோற்றப் பேசுபவர்களாகவும் இருப்பவர்களாகையாலே அவர்கள் மேல் பகவத் கடாட்ச வெள்ளம் பாய்வது பள்ளமடையாக இருக்கும். ஆகவே அவர்கள் பக்கம் நின்றேன்’ என்று மறுமொழி கூறினாராம். ஆனாலும், எம்பெருமானை நோக்கி ஆய்ச்சியர்கள் போற்றும் படியை யும் நம்பி போற்றும் படியையும் ஆண்டான் கண்டவராகை யாலே இந்த வேறுபாட்டைக் காட்ட வேண்டுமென்று திருவுள்ளம் பற்றி நம்பியை நோக்கி, ஆய்ச்சிகள் சொன்ன தென்ன?’ என்று கேட்டாராம். அதற்கு நம்பி பழம் உண்பீர், பால் பருகுவீர்; பொன்னாலே பூணு ல் இடு வீர்; நூறு பிராயம் புகுவீர்; அழுத்த இரட்டை உடுப்பீர்' என்று அவர்கள் கூறினதாகவும், தான் விஜயஸ்வ, விஜயீபவ, இத்யாதிகளைச் சொன்னதாகவும் மறுமொழி கூறினாராம். அதற்கு ஆண்டான், அங்குப் போயும் முரட்டு சமஸ்கிருதம் விட்டீர் இல்லையே; எங்கேயிருந்