பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் வைணவ சமயத்தில் வீடு பேற்றிற்குச் சிறந்த நேறியாகக் கொள்வது பிரபத்தி மார்க்கமாகும். இதனைச் சரணாகதித் தத்துவம் எனவும் வழங்குவர். "பிரபத்திக்குத் தேசமியமும் காலகிய மமும் பிரகார கியமும் அதிகாரி கிய மமும் பல கியமும் இல்லை.' [நியமம்-வரையறை) என்பது நீ வசன பூஷண குத்திரம். அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்று நம்மாழ்வார் எம்பெருமானை உபாயமாகப் பற்றியதுபோல் பற்றுவதே பிரபத்தியாகும். தேச நியமமாவது, தூயவிடங்களிலே செய்ய வேண்டும்; மற்றைய விடங்களிலே செய்யவாகாது என்பது. கால நியமமாவது, வேனிற்காலம் முதலான காலங்களிலே செய்யவேண்டும்; மற்றைய காலங் களி ல் செய்யலாகாது என்பது. பிரகார நியமமாவது, நீராடல் கால் கழுவுதல் என்பன முதலானவற்றை முன் ாைகக் கொண்டு செய்யவேண்டும்; வேறு வகைகளாலே செய்யவெண்ணாது என்பது. அதிகாசி நியமமாவது, 1. நீ வச.பூஷ்-24 (புருடோத்தம நாயுடு பதிப்பு.) 2. திருவாய் 6, 10 : 1.0