பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 翌盛3 கூறப் பெறுகின்றது. ஆழ்வார் திருநகரி இருப்பூர்தி நிலையத்திலிருந்து இரண்டு கல் தொலைவிலுள்ள இது ஆண் பொருநையாற்றின் வடகரைவிலுள்ளது. இத்தலங்கள் நவ திருப்பதியில் இரண்டாவது மூன்றாவதுமாகும் பெரும்பாலும் எம்பெருமாளின் திவ்வியதேசங்கள் யாவும் நீர் வளமும் நிலவளமும் மிக்க இயற்கைச் சூழ்நிலைகளில்தான் அமைந்திருக்கும். நம் வாகனம் இத்திருத்தலத்தை நோக்கி வருங்கால் இச் சூழ்நிலை நம் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றது. கரையிலிருப்பதால் வளமுள்ள தண் பொருநைக் பரந்த சோலைகளையும் குளிர்ந்த பண்ணைகளையும் கொண்டிலங்குகின்றது இத் திருத்தலம். கரைகொள் பைம் பொழில் தண்பனைத் தொலைவில்லி மங்கலம்' என்று பேசுகின்றார் ஆழ்வார். மேலும், நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கும் செந்தாமரை வாய்க்கும் தண்பொருதல் வடகரை வண்தொலைவிலி மங்கலம்' என்கின்றார். இதில் இத்தலம் தண்பொருநை'யின் வடகரையிலிருப்பதையும் நினைவாக எடுத்துக் காட்டுகின்றார். கம்பு, செந்நெல், தாமரை முதலிய மருதநிலக் கருப்பொருள்கள் நீர் வளத்தையும் நில வளத்தையும் காட்டி நிற்கின்றன. நீர்வளம் நிலவளங்களைக் கூறிய ஆழ்வார் இத் திருத்தலத்தின் தோற்றத்தையும் காட்டுகின்றார். :து.வளில் மணி மாடம் ஓங்கும் தொலைவில்லி மங்கலம்' என்ற ஆழ்வார் வாக்கினால் அந்தத் திவ்விய தேசம் குற்ற மற்ற சிறந்த இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற Lost. மாளிகைகளைக் கொண்டது என்பதையும் அறிகின் றோம். நமக்கு இது பொய்யுரையாகவே தோன்றும். 1.பொய்யில் பாடலாயிரத்தில்’’’ இங்ங்னம் பொய்யுரை புகலலாமா? என்றும் சிலர் ஐயுறக் கூடும். இலக்கண நூல் - ي-سسسسسسسس 6. திருவாய் 6. 5 : 3 T. ഒു. 6, 5 : 6 8. திருவாய் 6.5:1 9. திருவாய் 4.3:2