பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 245 கலந்து செவியமுதமாகக் கேட்கப் பெற்று அங்கு நின் அம் கால் பேரவொண்ணாதபடி இருக்கும். நாம் நம் சிற்றுந்தை நல்லதோர் இடத்தில் நிறுத்தி விட்டுத் திருக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். இக் திருத்தலத்து எம்பெருமானைப் பற்றி நாயகி நிலையி லிருந்து கொண்டு பேசிய ஆழ்வாரின் பாசுரங்கள் ஒன் றன்பின் ஒன்றாக நம் சிந்தையில் எழுகின்றன. பகவத் விஷயத்திலுண்டான தமது ஈடுபாட்டைத் தாமே பேசிக் கொள்வது தற்புகழ்ச்சி யாகும் என்று கருதியும் அதனை மேலும் சுவையுடைத்தாக இருக்க வேண்டும் என்று கருதியும் பாசுரங்களைத் தோழிப் பாசுரங்களாக அமைத் துள்ளார். ஆழ்வார் பகவத் விஷயத்தில் ஈடுபட்டிருக்கும் பெருமையை வேறு சில பாகவதர்கள் எடுத்துரைப்பதாக இருப்பது இதன் உள்ளுறைப் பொருளாகும். ஆழ்வார் ஏறிட்டுக்கொண்ட நாயகி சமாதி நம்மை யும் பற்றுகின்றது. பராங்குச நாயகி காலத்திற்கு நம் பாவனையும் செல்லுகின்றது. பராங்குச நாயகி பிறந்த பொழுது இவரது திருத்தாயர் முதலானோர் சோதிடர் களை அழைத்து இக்குழந்தையின் பேற்றுச் சிறப்புகளைப் பற்றி உசாவுகின்றனர். இவரது வாழ்வு மிகவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. இவள் உயர்வற உயர் நலமுடையவனான அயர்வறும் அமரர்கள் அதிபதி யால் மயர்வற மதிநலம் அருளப் பெறுவள்: உலகம் நிறைந்த புகழ் பெறுவள்; தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுவள்” என்றெல்லாம் சொல்லு கினறனர். அதன் பிறகு, ஆனால் இவளுக்கு ஒர் அவக்கேடு உண்டு. அது என்னெனில், இவளைத் தொலைவில்லி மங்கலத்திற்குக் கொண்டு சென்றீர்களாயின் இவளை இழக்க நேரிடும். இவளை அங்குக்கொண்டு போகாமலிருந்தீர்களாகில் இவளுடன் சேர்ந்து நீங்கள் நெடுங்காலம் வாழலாம். இந்த ஒரு கண்டத்திற்கு இவள் தப்பிப் பிழைப்பது அரிது’ என்றும் சொல்லியிருந்தனர்.