பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ஆனால், இவள் பிறந்த குடி தொலைவில்லி மங்கலத்திற்குக் கொண்டு போகாதிருக்கும்படியான குடி அன்று; பரம வைணவ நெறியைச் சார்ந்த குடி; இவளைப் பெறுவோ மாயினும் சரி, இழப்போமாயினும் சரி; அங்கு இவளை அழைத்துச் சென்று அத்தலத்து எம்பெருமானைச் சேவை பண்ணி வைத்தே தீர்வது” என்றிருக்கும்படியான குடி. அப்படியே அவர்கள் செய்யும்படியும் நேர்ந்தது. அதனால் விளைந்த விபரீதத்தையே தோழி எடுத்துரைக்கின்றாள். பராங்குச நாயகி தொலைவில்லி மங்கலத்து எம்பெருமானைச் சேவித்த நாள் தொட்டு அவனுடைய பேரழகில் ஈடுபட்டு அவன் திருமேனி அழகினையே வாய்வெருவுகின்றாள். இந்த நிலையைத்தான் தோழி தாய். மாருக்கு எடுத்துரைக்கின்றாள். 'தவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும், குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று கின்று குமிறுமே.' {தவளம்-வெண்ணிறமான; தடம்-விசாலமான, மல்கபெருக; நீலத்திருமேனிக்குப் பாங்காக வெள்ளிய சங்கு விளங்கும் அழகைப் பேசுகின்றாள். 'உண்பது சொல்லில் உலகளந் தான் வாயமுதம்; கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே' என்று ஆண்டாள் பேசுகிறபடியே பேசு கின்றாள். இடையீடின்றியோ பகவதநுபவம் பெற்றிருக்கும் சங்கிற்கே உடம்பு வெளுக்கும் நிலை ஏற்பட்டால் பகவத் தருபவம் சிறிதும் இல்லாத தன்நிலை என்ன வாகுமோ என்று ஏங்குகின்றாள் போலும். பெருங்கேழ லார் தம் பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம்மேல் ஒருங்கே. பிறழவைத்தார்' என்று எம்பெருமான் தன்னைக் குளிர் 12 திருவாய் 5. 5 : 1. 14. திருவிரு-45. பிறழ-மிக. 13. நாச். திரு. 7 : 8