பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宠48 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ! நிமியும்-நெளியும்; நெக்கு ஒசிந்து-கட்டுக்குலைந்து. கரையும்-உருகும்.) என்பது தோழி காட்டும் ஆழ்வார் நாயகியின் நிலையாகும்; ஆர்த்தர்களின் கூக்குரலைக் கேட்பதற்காகத் திருப்பாற். கடலில் அவதாரம் செய்யும் பொருட்டுச் சாய்ந்து கிடக்கும் கோலத்தைச் சிறப்பாகப் பேசுகின்ற நிலையையும் நினைவு கூர்கின்றோம். மாவலியிடத்து மானுருவாய்ச் சென்று அடியை மூன்று இரந்து அங்கே நின்று ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக்கொண்ட படியை அற்புதமாகத் தலைவி பேசுவதைத் தோழி எடுத்துக்காட்டுவதையும் சிந்திக்கின்றோம். இந்தச் செயல் கனால் தனது பரத்துவத்தை நிலை நாட்டும் எம்பெருமான் இடையனாய்ப் பிறந்து பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்துத் திரிந்த செளலப்பிய செளசில்ய குணங்களை வாய்வெருவுகின்றதைக் குறிப்பிடுகின்றாள். அத்துடன் தில்லாமல் கண்களில் குளமாகத் தேக்கிய நீரைத் தாரைத் தாரைவாகச் சொரிந்து நிற்கும் நிலையையும் நினைவுடன் காட்டுகின்றாள்.

திரைகொள் பெளவத்துச் சேந்த தும்திசை

ஞாலம் தாவி யளந்ததும், கிரைகள் மேய்த்ததும் மேபி தற்றி நெருங்கண் ணிர்மல்க கிற்குமே.”* (திரை-அலை; பெளவம்-கடல்; நிரைகள்-பசுக் கூட்டங்கள்.) என்பது தோழி காட்டும் பராங்குச நாயகியின் நிலை யாகும். அடுத்து, தோழி தலைவியின் நாண் அழிவிணை 'அற்கம் என்றும் அறவுறாள்' என்று எடுத்துக் காட்டு கின்றாள். என் சிறகின் கீழ் அடங்காப் பெண்னைப் பெற்றேன்' என்று திருமங்கை மன்னன் தாய் சொல் லாலே வெளிவருகின்றதை நினைவு கூர்கின்றோம். 17. திருவாய் 6, 5 : 3 18. திருநெடுந் 12