பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில்லி மங்கலத் தாமரைக் கண்ணன் 249 'கற்கும் கல்வியெல் லாம்.க ருங்கடல் வண்ணன் கண்ணபி ரானென்றே ஒற்கம் ஒன்றுமி லள்உ கந்துகக் துள்ம கிழ்ந்து குழை புமே' (ஒற்கம்-ஒடுக்கம்; உகந்து-ஆனந்தப்பட்டு.) என்று தோழி காட்டும் ஆழ்வார் நாயகியின் நிலையையும் சிந்திக்கின்றோம். இச்சமயத்தில், 'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் கற்றாள் தொழா ரெனின்.' என்ற வள்ளுவர் வாக்கும் நம் சிந்தையில் பளிச்சிடு கின்றது. மழை பெய்தாலொக்கும் கண்ண நீரோடு அவன் அழகினை நெஞ்சில் நிறுத்தியவளாய் அவன் உகந்து எழுந்தருளியிருக்கும் திருப்பதியைத் திசை நோக்கித் தொழுதவண்ணம் இருக்கும்' ஆழ்வார் நாயகியை மான சீகமாகக் காண்கின்றோம். நோக்கு மேல் அத் திசையல் லால்மறு கோக்கி லள்வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன் நாமமே யிவள் அன்னைtர்.' (அத் திசை-தொலைவிலிமங்கலம் இருக்கும் திசை, மறு-வேறு; நாமம்-பெயர்.) என்பது தோழிகாட்டும் தலைவியின் நிலை. ஒரு தடவை அத் திருப்பு:தியைப் பார்த்தாளாகில், அந்த இடத்தைத் தவிர வேறு திசையில் தன் பார்வையைச் செலுத்து வதே இல்லை என்கிறாள் தோழி. இவள் வாயினின்று வெளிவரும் சொற்களும் எம்பெருமானின் திருநாமங் களேயாகும் என்பதையும் குறிப்பிடுகின்றாள் அவள். மேலும், தோழி கூறுகின்றாள்: 19. திருவாய் 6, 5 : 4 21. திருவாய் 6.5 :5 20. குறள் -2 22. ഒു. 6, 5 : 6