பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் ருேசி விவசர்க்குப் பாதமே சரண் ஆக்கும் ஒளதார்யம் வானமா மலை யிலே கொழுந்து விடும் ” (ருசிவிவசர்-திருமேனிஅழகின் ருசியில் பரவசப்பட்ட வர்கள்; ஒளதார்யம்.வள்ளல் தன்மை; கொழுந்து விடும்.வளரும்) இத்திருத்தலத்து எம்பெருமானிடம் வள்ளல் தன்மை என்ற திருக்குணம் முதன்மை பெற்றுப் பிரகாசிக்கும் என்பது கருத்து. கருளப்புள் கொடி சக்கரப்படை வான நாட! எம் கார் முகில் வண்ன! (5; 7: 3) என்ற திருப்பாசுரப் பகுதியைத் திருவுள்ளம்பற்றி ஒளதார்யம்' என்கின்றார் என்பதையும், என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே: (3.7:1 என்ற திருப்பாசுரப் பகுதியைத் திருவுள்ளம் பற்றிக் கொழுந்து விடும்’ என்கின்றார் என்பதையும் நாம் சிந்திக்கின்றோம். நாடோறும் நடைபெற்றுவரும் எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனமே இத்திருத்தலத்தின் சிறப்பாகும். ஆறுபடி நல்லெண்ணெயுடன் சிறிதளவு சந்தன எண்ணெயைச் சேர்த்துக் காப்பு நடைபெறுகின்றது. இங்ங்னம் மூலவர் தோத்தாத்திரி நாதருக்குத் திருமஞ்சனம் செய்யப்பெற்ற எண்ணெயை ஓரிடத்தில் சேகாம் செய்து அதனைப் பின்னர் வீரப்ப நாயக்கர் மண்டபத்திற்குப் பின்புறம் உள்ள எண்ணெய்க் கிணற்றில் விட்டுவிடுகின்றனர். நாம் கால்படி நல்லெண்ணெய் கொணர்ந்தால் அதனை இக் கிணற்றில் ஊற்றிவிட்டு அக்கிணற்றிலிருந்து கால்படி எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். கோயில் ஆட்சியாளர் களிடம் சொன்னால் எடுத்துத் தருவார்கள். இந்த எண்ணெய் தீராத சரும நோய், குட்டம் (தொழு நோய்) முதலியவைகளையெல்லாம் தீர்க்கின்றது என்று மக்கள் நம்புகின்றனர் வடநாட்டு பக்தர்கள் இந்த எண்ணெயை அதிகமாக வாங்கிச் செல்லுகின்றனர். இந்த எண்ணெயின் 32. ஆசா. ஹிரு-163