பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக தம்பி 2警籍 குடி' என்றும் சிறப்பித்துப் பேசுகின்றார். திருமங்கை யாழ்வாரும் இந்த ஊரில் சந்திரனை தொடும் அளவுக்கு உயர்ந்த மாளிகைகள் இருந்தன என்றும்" இவ்வூரை உயர்த்திக் கூறுகின்றார். நாம் கீழ மாடவீதியிலிருந்து திருக்கோவிலுக்குள் நுழைகின்றோம். மட்டையடி மண்டபம், இரதி மண்டபம் ஆகியவற்றையெல்லாம் கடந்து கொடிமரம் (துவஐ ஸ்தம்பம்) இருக்கும் மண்டபத்திற்கு வருகின்றோம். இந்த மண்டபத்தின் வடபுறத்தில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதியையும் அதற்கு முன்பதாக உள்ள அழகான மண்டபத்தையும் காண்கின்றோம். இந்த மண்டபத்தின் துரண்களில் அழகான சிற்ப வடிவங்கள் செதுக்கப் பெற்றுள்ளன. ஆயினும் இந்த மண்டபத்தில் வெளவால் களும் துரிஞ்சில்களும் ஆக்கிரமித்துக் கொண்டு அகத்தம் செய்துள்ள நிலையையும் காண்கின்றோம்: இந்தத் திருக் கோயிலின் கொடிமரம் சந்நிதிக்கு நேராக இல்லை. அது சற்று வடபுறமாக விலகி இருப்பதைப் பார்க்கின்றோம். அதன் காரணத்தை வினவ, கோயில் அலுவலர் ஒருவர் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காகத் தான் அது விலகியிருப்பதாகக் கூறுகின்றார். நம்பாடுவான் யார் என்பது பற்றியும் அவரே விவரங்கள் தருகின்றார். திருக்குறுங்குடியை அடுத்துள்ள மகேந்திரகிரியில் யாழ் வாசிப்பதில் வல்ல பாணர்களுள் ஒருவன் திருக்குறுங்குடி நம்பியைச் சேவிக்க வருகின்றான். அவன் வந்த நாள் கார்த்திகை மாத சுக்கில பட்ச ஏகாதசி. அவன் வரும் வழியிலே பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் இவனைப் பற்றிப் பசி தீர்த்துக் கொள்ள எண்ணுகின்றான். நம்பியைச் சேவித்த பிறகு தான் வந்து இராக்கதனுக்கு இரையாவதாகப் பாணன் உறுதி கூற , இராக்க தனும் அவன் சொற்களை நம்பி அவனை விடுவிக்கின்றான். 19. பெரி. திரு. 5 : 5 9 20. ഒു. 9, 6: 6