பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்குடிக் குழக நம்பி 279 நின்று என்னை நலிகின்றன." கற்பகக் கொடிபோன்ற அவனது திருமூக்கும் கொவ்வைச் செவ்வாயும், நீலமேகம் போன்ற திருமேனியும், நான்கு திருத் தோள்களும் என் நெஞ்சை இடமடைத்துக் கொண்டு கிடக்கின்றனவே." சோதி வெள்ளம் அலையெறியும் திருமேனியுடன் என் உள்ளத்தில் வேர் கொண்டு விட்டான்." செய்யதாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவம் மொய்யழ்ேகுழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே” (அல்குல்-இடைக்குக் கீழுள்ள பின் புறப்பகுதி;மெசய்ய. செறிந்து நீண்ட, குழல் கேசம்.) திருமுடி முதல் தோன்றும் திருவபிடேக முதலான எண்ணற்ற சேர்த்தியழகு பொருந்திய திருவாபரணங் களையுடைய அப்பெருமான் கன்னலும் பாலும் அமுதமும் போன்று என் நெஞ்சை விட்டு நீங்காது நிற்கின்றான்". அவனது சோதி வெள்ள த்தில் எழுகின்ற ஒரு திவ்விய உருவம் என் உள்ளத்தில் பிரகாசித்த வண்ணம் நிலை பற்று நிற்கின்றதே". இங்ங்னம் ஆழ்வார் நாயகி பெற்ற நுபவித்த நிலையை நாமும் பெறுவது போன்ற உணர்ச்சியில் உந்தப் பெறுகின்றோம். பரகால நாயகியின் நிலையையும் நாம் சிந்திக் கின்றோம். வெண்ணிறமுள்ள பிதைமதியும், அலைவெறி கின்ற கடலும், தண்மலர்த் தென்றலும், அன்றிற் பறவை களின் ஒலியும் என்னை நோவு படுத்துகின்றன’’. காலை மாலை என்ற வேறுபாடின்றி எப்பொழுதும் துன்புறு கின்றேன். இரவு நேரம் ஊழியைவிட நீளுகின்றது. 29. திருவாய் 5. 5 : 5 3). ബു, 5. 5 : 6 81. ഒു. 5, 5 : 7 32, 6ു. 5. 5 : 8 88. ബു, 5, 6 : 9 8:4. ഒു. 8്. 6 : 1. 35. பெரி. திரு. 9, 5 : 5