பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் செல்லும். அதன் பிறகு நடராஜா சர்வீஸ்'தான். மலையில் இந்த நம்பி சுமார் ஏழு அல்லது எட்டு அடி உயரத்தில் சிலை உருவில் கம்பீரமான கோலத்துடன் காட்சி நல்குகின்றான். வாகன வசதியும் கால் வலிவும் உள்ள வர்கள் இவனையும் சேவித்துத் திரும்பலாம். இத் திருத்தலத்திற்கே குறியவன் குடி (குறுங்குடி) எனப் பெயரளித்த வாமனனையும் பார்க்க விழைகின் றோம். அவனுக்குக் கோயிலில் ஏனோ இடந்தரவில்லை, திருக்கோயிலுக்குத் தென் திசையில் நான்கு ஃபர் லாங்கு தோலைவில் உள்ள சத்திரம் ஒன்றில் இடம் தந்திருக் கின்றனர். அந்தச் சத்திரத்திற்குச் சென்று அவனையும் வணங்குகின்றோம். மீண்டும் திருக்கோயிலுக்கு வந்து நம்பியாரிடம் பிரியா விடை பெற நினைக்கின்றோம். இந்தக் குறுங்குடி நம்பியின் திருவருளினால்தான் நம்மாழ்வார் திருவதரித்தார் என்பது வரலாறு. திருவிருத் தத்தில்.

கொடுங்காற் சிலையர் கிறைகோள்

உழவர் கொலையில்வெய்ய கடுங்கால் இளைஞர் துடிபடும் கெளவைத் தருவினையேன் நெடுங்கா லமும்கண்ணன் நீள்மலர்ப் பாதம் பரவிப்பெற்ற தொடுங்கால் ஒசியும் இடைஇள மான்சென்ற சூழ்கடமே.”* (சிலையர்-வில்லையுடையவர்; நிரை-பசுக் கூட்டம்; கடு கால்-நடை விரைந்தகால்; துடி பறை; தொடுங்கால்தொட்டால்; ஒசியும்-ஒடியும்; கடம்-பாலைநிலம்) என்பது இரங்கல் துறையிலமைந்த பாசுரம். நம்மாழ்வார் ஒரு தலைவியின் மன நிலையை அடைந்து, அதே நிலை யில் தலைவி தலைவனுடன் சென்றமைக்குத் தாய் வருந்துவதாக அருளிய பாசுரமாகும் இது. தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப பாட்டைக் கூறும் முகத்தால் நம்மாழ்வாருடைய அவதாரச் சிறப்பு குறிப்பாக இப் பாசுரத்தில் வெளியிடப் பெற்றிருப்பது கண்டு மகிழத்தக்கது. உடைய நங்கையார் என்ற நம்மாழ்வாரின் திருத் தாயார் திருமால் திருவடிகளை வணங்கி அவர் அருளால் 43. திருவிருத்-37