பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமொய்த்து இன்னமுதம் 21 யால் காணவேண்டும்படியாக இருப்பது அந்தர்யாமித்துவம் என்ற இறைவனின் நிலை. ஆவரண ஜலம் இந்த அண்டத்திற்குமேல் மூடிக் கொண்டிருப்பதாகக் கருதுவது புராணம். தாகவிடாய் கொண்டவனுக்கு இந்த நீரும் பயன்படாது. கண்டு பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவாருக்கு எம்பெருமான், 'மூவுலகும் கடந்தப்பால் முதலாய் கின்ற அளப்பரிய ஆரமுது’’ என்று திருமங்கை மன்னன் கூறுகின்றபடி இந்த லீலா விபூதிக்கு அப்பாற்பட்டிருப்பவன் பரத்துவ நிலை எம் பெருமான். நெடுந்துாரம் என்று சொல்லவொண்ணாதபடி இந்த உலகத்திற்குள்ளே பாற்கடல் இருப்பினும்,

  • பாலாழி நீ கிடக்கும்

பண்பையாம் கேட்டேயும்.’’’ (ஆழி-கடல்) என்று நம்மாழ்வார் கூறுகின்றபடி அது நம்மால் பலர் சோல்லக் கேட்டிருக்கும் நிலையேயன்றி சென்று காண அரிதாயிருப்பவன் வியூகநிலை இறைவன். தண்ணீர் வேட்கைக் கொண்டவனுக்கு அவன் சென்று அடைய முடியாத பாற்கடல் போலிருப்பவன் அவன். புயலால் பெருமழை பெய்து ஆறுகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டாலும் அந்த வெள்ளம் ஒடிய காலத் திருப்பவர்கட்கு மட்டிலுமே பயன்படுவது அந்த ஆற்று நீர். அங்ங்னமே எம்பெருமான், 'மண்மீது உழல்வாய்.” 2. திருநெடுந். 14. 3. பெரிய. திருவந். 34.