பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 திருமெய்யத்து இன்னமுதம் என்று கேட்டுக்கொண்டு வருதல் வேண்டும். கோயிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் சத்தியதீர்த்தம்’ என்ற ஒரு சிறு குளம் இருப்பதைக் காண்கின்றோம். திருக்கோயில் பெரும் புகழ் பெற்றது. திரு அரங்கத் திற்கு அடுத்தபடியாகச் சிறப்புடையது என்பது வைணவ பெருமக்களின் கருத்து. அவர்கள் இதனை ஆதி ரங்கம்’ என்றே வழங்குகின்றனர். திருக் கோயிலைக் கம்பீரமான ஓர் அழகிய இராசகோபுரம் அணி செய்கின்றது. திருக்கோயிலின் தெற்குப் புறத் திலிருக்கின்ற இராசகோபுர வாயிலைக்கடந்து சென்று ஒரு பெரிய மண்டபத்தை அடைகின்றோம். மண்டபத் தின் தூண்களில் நல்ல சிற்ப வடிவங்கள் காட்சி அளிக் கின்றன. இந்த மண்டபத்தில் ஆண்டாள், கண்ணன்: சக்கரத்தாழ்வார் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. வலப்புறத்தில் நரசிம்மருக்கு ஒரு சந்நிதி உள்ளது. இவர்களையெல்லாம் வணங்கிக் கொண்டே அர்த்த மண்டபத்தை அடைகின்றோம். இந்த் மண்டபத்தை யும் கடந்துதான் மகாமண்டபத்தை அடைகின்றோம். மகாமண்டபத்தில் எம்பெருமான் சந்நிதியை நோக்கிய வண்ணம் பெரிய திருவடி காட்சி தருகின் றார். இந்த மண்டபத்தை அடுத்திருப்பது சுந்தர பாண்டியன் குறடு. இதன் வழியாகத்தான் எம்பெரு மானின் சந்நிதியை அடைதல் வேண்டும். இந்தச் சந்நிதி மலைச் சரிவையொட்டி உள்ளது. சந்நிதியின் தூண்களில் பூப்போதிகைகள், தாமரை மொட்டுகள் கண்கவர் வனப்புடன் செதுக்கப் பெற்றிருப்பதைக் கண்டு களித்தவண்ணம் எம்பெருமானின் கருவறைக்கு வருகின்றோம் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திரு முக மண்டலங்கொண்டு சேவை சாதிக்கும் சத்தியகிரி காதனைக் கண்டு வணங்குகின்றோம்.

  • மையார் கடலும்

மணிவரையும் மாமுகிலும்