பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாண்டிநாட்டுத் திருப்பதிகள் கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட மெய்யானை மெய்ய மலையானைச் சங்கேந்தும் கையானைக் கைதொழாக் கையல்ல கண்டோமே (மை.ஆர்-கறுத்த வரை மலை; முகில்-மேகம்; கொய் ஆர்-பறிக்கும் விருப்பத்தை தரும்; இருண்ட-கறுத்த, மெய் யான்-திருமேனியையுடையவன்) என்ற பாசுரத்தை ஓதி உளங்கரைந்து கைபெற்ற பயனை எய்துகின்றோம். எம்பெருமானின் திவ்விய மங்கள விக்கிரகத்தின் பேரழகு சொல்லுந்தரமன்று. அத்திருவழகு கடல்போல் எல்லைகாண வொண்ணா தது; நீல மணியாலான மலைபோல் நெஞ்சங்கவர்வது; காளமேகம்போல் குளிர்ந்து நம் விடாயையெல்லாம் திர்க்க வல்ல்து; குவளைப்பூவும் காயாமலரும்போல் வைத்தகண் வாங்காது பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்படியான பேரழகு வாய்ந்தது. இத்தகைய திருமேனியையுடைய எம்பெருமான் அடியார்கட்கு முற்றுாட்டாகத் தன்னைக் கொடுத்துக்கொண்டு சங்கேந்தும் கையுடன் திருமெய்ய மலையில் எழுந்தருளி யுள்ளான். இவனைத் தொழாத கை கையல்ல, உலக் கையே என்று கூறும் ஆழ்வார் பாசுரத்தில் ஆழங்கால் பட்டவண்ணம் அவனைத் தொழுகின்றோம். திருமங்கையாழ்வார் மட்டிலுமே. மெய்யம் அமர்ந்த பெருமானை' மங்களாசானம் செய்துள்ளார். <of ருடைய பாசுரங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றன. காவல்மிக்க 9. பெரி. திரு. 11. 7 : 5