பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 3? சேததன் உபாயமாகப் பற்றுவதற்கு இன்றியமை யாதவை எம்பெருமானுடைய இணைத்தாமரை அடி கள்.” இத்திருவடிகள் எம்பெருமானை விடவும், பிராட்டி யாரை விடவும் சிறந்தனவாகும் என்பது வைணவர்களின் நம்பிக்கை. இதனைச் சிறிது விளக்குவோம். பிராட்டியார் சேதநனுடைய துன்பநிலையைக் கண்டு மனமிரங்கி அவனை அங்கீகரிக்குமாறு எ பெருமானுக்குப் புருஷ காரம் செய்கின்றார். இந்நிலையில் அவர் இவனுடைய குற்றங்களைப் பகவானிடம் எடுக் துரையார் என்பது உண்மை. ஆயினும், ஈசுவரன் மனத்தில் இவனை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவிப்பதற்காக, ஒரு கால் சில குற்றங்களை எடுத்தியம்புதல் கூடும்; இங்ங்னம் குற்றம் உரைக்கும் முறையில் பிராட்டியார் சேத நனைக் கைவிடுபவராகின்றார். அந்தச் சேதநனிடம் ஊன்றிய அன்புகொண்ட பகவான் தனக்குள்ள வாத்சல்யம் முதலிய குணங்களால் . என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்’ என அவனை அங்கீகரிக்க முன்வந்து நிற்பன். அத் தகைய எம்பெருமானும், ஒருகால் இவனைக் கைவிடுவ துண்டு. இம் முறையில் சேதநனுக்கு நன்மை புரிபவர் களாகிய இருவரும் கைவிடினும், தம் அழகினால் சேதநனை அப்புறம் செல்லாதவாறு அகப்படுத்திக் கொள்ளும் அவனுடைய திருவடிகளோ, சேதநனை விடாது பற்றிக்கொள்ளும் திண்மை வாய்ந்தனவாக இருக்கும். இதனையே, 'பிராட்டியும் அவனும் விடினும் திருவடிகள் விடாது திண்கழலாயிருக்கும்’’’ என்ற முமுட்சுப்படி வாக்கியம் விளக்குகின்றது.ஆழ்வாரும், 'வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.' 3. பெரியாழ். திரு. 4-9:2 4. முமுட்சுப்படி, 146.