பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இங்குள்ள கடற்கரைச் சோலைகள் திருமங்கையாழ் வார் திருவாக்கில் மிக அற்புதமாக இடம் பெற்றுள்ளன.

இலங்கு முத்தும் பவளக்

கொழுந்தும் எழில்தாமரை புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்து அழகாய புல்லாணி' |இலங்கு விளங்குகின்ற; கொழுந்து-துளிர்; எழில்அழகிய; புலங்கள்-இடங்கள்; பொழில்-சோலைகள்) என்பது அவர் காட்டும் சோலை. ஒளி மல்குகின்ற முத்துக்களையும் அழகிய பவளத் துளிர்களையும் அலர்ந்த தாமரைப் பொய்கைகளையும் உடைத்தான சோலைகளால் சூழப்பட்டது திருப்புல்லாணி என்ற திவ்விய தேசம் என்கின்றார்; இந்தச் சோலைகளைப் பாசுரங்கள் தோறும் பன்னி உரைக்கின்றார். தாதுமல்கு தடஞ்சூம் பொழில்’’’ போது நாளும் கமழ்பொழில் சூழ்ந்த புல்லாணி' செழுந் தடம் பூஞ்சோலை சூழ்புல்லாணி' 'பூஞ்செருந்தி பொன் சொரியும் புல்லாணி: 'போதலரும் புன்னை சூழ் புல்லாணி’’’ என்ற அப் பெருமானின் வாக்குகளைக் கண்டு மகிழ்க. மேலும், கள்ளவி ழும்மலர்க் காவியும் தூகடற் கைதையும் புள்ளும் அள்ளற் பழனங்களும் சூழ்ந்த புல்லாணி’’’


ہے۔- ر ----- ہ ھ ء -------- عدہ

17. பெரி.திரு. 9 3 : 1.0 18. 6: 9.3 : 3 தாது-பூந்தாது. 19. ങു. 9.3 : 3 போது-பூக்கள் 2s). ങ്ങ് 9.4 : 6 தடம்-தடாகம் 21. ഒു. 9.4 : 8 செருந்தி-கரபுன்னை, பொன் பொன்போன்ற மலர்கள். 22. பெரி.திரு. 9.4 : 9 23. டிை 9.3 : 6