பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புல்லாணி எம்பெருமான் 47 (கா-சோலை; பெண்ணை-பனைமரம், அரிகுரல் - தமுதமுத்த குரல், ஏ-அம்பு; எஃகு-வேல்படை, பாவாய் - தோழியே, பான்பை இயல்பு.) திருப்புல்லாணியைத் தொழ நினைத்தவளுக்கு அன்றிற் பறவைகள் எழுப்பும் குரல் அம்புபட்ட வாயில் வேற் படை புகுத்தாற்போல் துன்புற்றவளுக்கு மேலும் துன் பத்தை விளைவிக்கின்றது. தனிமையாகத் துன்பப்படு வதே தன் இயல்பாயிற்றுப் போலும் என்று கருதுகின் றாள். இவ்விடத்தில் பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக் கியானம்: மாறாடி வருவது மன்றிக்கே இது ஸ்பாவமாய் விட்டதே. நித்தியசூரிகள் தித்தியாநுபவம் பண்ணா நின்றார்கள். இவ்வருகுள்ளார் (சம்சாரிகள்) அநந்யபரராக (வேறிடத்தில் கருத்தற்றவராக) நின்றார்கள். நோவு படுகைக்கென்றே நம்மை மூன்றாம் விபூதியாகப் பண்ணி விட்டதாகாதே என்கிறாள். இஃது இங்குச் சிந்தித்து மகிழத்தக்கது. அடுத்து, தன் சிந்தை நோயை எம்பெருமானிடம் சென்று செப்புமாறு பறவைகளைத் தூது விடுகின்றாள். தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு மினே' என்பது ஆழ்வார் நாயகியின் திருவாக்கு. 'அரியுருவாய் வந்து இரணியனை முடித்துப் பிரகலா தனுக்கு அருள் புரிந்த எம்பெருமான் நமக்கு அருள் புரிவது மிக அழகாக இருக்கிறது' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ளுகின்றாள். அரிமலர்க்கண் நீர்ததும்பும் நிலையில். வில்லால் இலங்கையை அழித்த வல்லாளன் பின் போன நெஞ்சம் திரும்பி வருமளவும் பொறுத்திருக்க எண்ணுகிறாள். எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் புல்லாணி எம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே.”* 39. பெரி. திரு. 9.4; 3 41. டிை 9. 4 : 5 40. ഒു. 9, 4 : 4