பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் வல்ல பரதத்துவத்தை அறுதியிடும் வழியை ஆராய்ந்தனர். இறுதியில், டிெ ன்னும் மணியுமாக அளவற்ற பொருளை ஒரு சீலையில் முடிந்துக் கட்டி அந்தப் பொற்கிழியை அவை யின் நுழைவாயிலில் தொங்கவிட்டனர். சாரமான சமய உண்மையைப் பிரமாணங்களால் மெய்ப்பிக்கும் பெரியோருக்கு அது உரியது என்று பறையறைவித்து நாடெங்கும் அறிவித்தனர். குறிப்பிட்ட நாளில் பல்வேறு சமயத்தினர் மதுரையில் வந்து திரண்டனர். செல்வ நம்பி தம் முடைய நண்பரான விஷ்ணுசித்தரும் (பெரியாழ்வாரும்). வில்லிபுத்துாரிலிருந்து எழுந்தருளுவார் எனக்கருதினார். வில்லிபுத்துர் எம்பெருமான் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி மதுரைக்கு ஏகுமாறு பணித்தார். விஷ்ணு சித்தரும் எம்பெருமான் மீது பாரத்தைப் போட்டு பாண்டியன் அனுப்பிய பல்லக்கில் மதுரைக்கு ஏகினார். பக்த குழாங்களும் அவரைப் பின்தொடர்ந்தன. குறித்த நேரத்தில் வாதப்போர் தொடங்கியது. ஒவ்வொரு சமயத்த வரும் தத்தம் வாதப்போர்களை மும்முரமாகத் தொடங் கினர். இந்நிலையில் விஷ்ணு சித்தர் வருகை அவைக்கு அறிவிக்கப் பெற்றது. அரசனும் புரோகிதரும் அவரை வணங்கிச் சீரிய சிங்காதனத்தில் அமரச் செய்தனர். எல்லோருடைய வாதங்களும் முடிந்த பின்னர் விஷ்ணு சித்தர் தம் வாதத்தைத் தொடங்கினார். சமயவாதியர் விடுத்த வினாக்கட்கெல்லாம் அமைதியாக மறுமொழி பகன்றார். அவர்களுடைய பொறாமையைப் பொறுமை யாலும், பகைமையுணர்ச்சியை அன்புணர்ச்சியாலும் வென்றார். தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களால் எதிர்த்தார். அறியாமையை அறிவினாலும், 55 5ঠা பெருமையைப் பணிவினாலும் வென்று வாகை சூடினார். கமலைக் கேள்வனுடைய கருணையைக் கணக்க நம்பி யிருந்த அவருக்குச் சாத்திர உண்மைகள் யாவும் அங்கை நெல்லியாகத் தெளிவாயின. அவனுடைய அரு ளால் இதர சமயக்கொள்கைகளை எல்லாம் சுருதி,