பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் 'வானார் எழிலி மழைவள ஒத்தத் தேனார் சிமைய மலையின் இழிதந்து கான்மாடக் கூடல் எதிர்கொள்ள ஆனா மருந்தாகும் தீ நீர் மலிதுறை மேய இருந்தையூர் அமர்த்த செல்வகின் திருந்தடி தலைபுறப் பரவுவதும் தொழுது என்ற அடிகளில் இருந்தையூர்’ என்பது மதுரையைச் சார்ந்து வையைக் கரைக்கண் உள்ளது எனவும், அவ்வூரில் திருமால் திருக்கோயில் கொண்டவாறும் அறியக் கிடக் கின்றன. அரும்பத உரையாசிரியர் கூறிய இருந்தவளம் என்னும் மதுரைப்பகுதியே இருந்தையூர்’ என்னும் பெய ரால் பரிபாடலில் வழங்கலாயிற்று என்பதை எளிதில் தெளியலாம். இருந்தையூர்-இருந்தவூர் என்பதன் மரூஉ. நூற்றெட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகிய கின்றை, கின்றவூர் போல இதனையும் கொள்ளல் வேண்டும்.' இருந்தையூர் அமர்ந்த செல்வ!’ என்பதில் திருமாலின் இருந்த திருக் கோலம் குறிப்பிடப் பெற்றிருத்தல் கவனிக்கத் தக்கது. இங்ங்னம் இருந்தையூர், இருந்தவளம் என்ற பெயர்களுடன் மதுரையருகில் வேறு ஊர் ஒன்றும் காணப்பெறவில்லை யாதலின், இத்திருநாமங்கள் இரண்டும் கூடலழகர் சந்நிதியையே குறிக்கின்றன என்பது தெளிவாகின்றது.

13

ஈண்டுக் குறிப்பிடப்பெற்ற இருந்தையூர் போலவே மதுரையைச் சுற்றிப் பல தலங்கள் முற்காலத்தில் இருந்த தாகப் பண்டைய இலக்கியங்கள் பகர்கின்றன. 'வடதிரு ஆல வாய்திரு நடுவூர் வெள்ளி யம்பலம் கள்ளா றிந்திரை பஞ்சவ வீச்சரம் அஞ்செழுத் தமைத்த 13. பரிபாடல் திரட்டு-முதற்பாடல்-அடி (1-6) - 14, இவ்வாசிரியர் எழுதி வெளியிட்டுள்ள தொண்டை நாட்டுத் திருப்பதிகள் என்னும் நூலில் (9-வது கட்டுரை) இத்திருப்பதியைப்பற்றி அறியலாம்.