பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமோகூர்க் காளமேகம் 77 கின்றோம். அடுத்த வாயிலைக் கடத்து கருட மண்டபம்’ என வழங்கும் ஒரு மண்டபத்திற்கு வருகின்றோம்.அங்குக் கண்கவர் வனப்புடைய மூன்று தான்கு நல்ல சிலைவடிவங் கள் தூண்களை அணி செய்வதையும் காண்கின்றோம். ஒரு தூணில் மிதிலைச் செல்வியை அனைத்தவண்ணம் உள்ள கோதண்டராமன் சிலையும், அதனையடுத்து இன்னொரு துணில் இலக்குவன் சிலையும் காணப்பெறு கின்றன. இச்சிலைகளைத் தவிர காமவேளின் சிலையும் இரதிதேவியின் சிலையும் நம் கண்ணுக்கு விருத்தாக அம்ை கின்றன. இந்தச் சிலைகளுக்கிடையில் பெரிய திருவடி ஒரு சிறிய கோயிலில் நின்று காட்சி தருகின்றார். இவற்றையெல்லாம் கண்டு களித்தவண்ணம் மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்திற்கு வருகின்றோம். அங்கிருந்து பார்த்தாலே கிழக்கே திரு முக மண்டலங்கொண்டு நின்ற திருக்கோலத்தில் பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார் என்ற இருவருடன் மூலவர் காளதேகப் பெருமாள் சேவை சாதிக்கின் றதைக் காணலாம். இவருடைய கம்பீரமான தேர றத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த அநுபவத்தைப் பெறுகின்றோம். இலம் கதி மற்றொன்று எம்மைக்கும்... நலம் கழல் அவன் அடி நிழல்தடம் அன்றி' என்றும் - } அன்றியாம் ஒரு புகலிசும் இலம் என்று என்று அலற்றி ........தாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே' என்றும், திருமோகூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரனே' என்றும் தம்முடை நல்லரண் நாம் அடைந்தனம்' என்றும் நம்மாழ்வார் ஒரு முறைக்கு நான்கு முறை கூறி மகிழ்ந்தாரன்றோ? அந்த அநுபவத்தை நாமும் பெற்றதுபோல் உணர் கின்றோம். இந்தத் திருவாய் மொழியில் எம்பெருமானைச் சிந்தித்து ஆழ்வார் அநுபவித்த படிகளையெல்லாம் 18. திருவாய்-10.1:2 19. டிை-10.1:3 20. ഒു-10, 16 21. ഖു--10, 1 : 9