பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நம் மனத்தில் ஓட விடுகின்றோம். முதலில் எம்பெரு மான் காளமேகத்தின் திவ்வியத் திருமேனியில் நடு மனம் ஆழங்கால் படத் தொடங்குகின்றது. நம்முடைய தாபக்கிலேசங்கள் எல்லாம் போகும்படி நம்மைக் கவர்ந்த மேரகதமணித்தடத்தை மேலே குறிப்பிட்டோம். அசுரர் களைப் புடைக்கவல்ல நான்கு திருத்தோள்களில் நம் மனம் ஈடுபடுகின்றது. தோள் கண்டார் தோளே கண்டார்?' என்று மிதிலை மக்கள் இராமன் திருமேனி அழகில் ஈடுபட்டது போலவே, நாமும் திருத்தோள் அழகில் சொக்கி நிற்கின்றோம். மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ’ என்று திருமங்கையாழ்வார் அநுபவித்த சுேரிகுழல் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் போக்கில் கமலக் கண் கனி வாய் நம்மை ஈர்க்கின்றது. 'சுரிகுழல் கமலக் கண்கணிவாய் கான மேகம்' என்று ஆழ்வார் தாம் நெடுநாள்பட்ட சம்சாரத் தாப மெல்லாம் ஆறும்படியாகச் சொல்லித் தீர்த்த சொல் லமைப்பினைச் சிந்திக்கின்றது நம் மனம். எம் பெருமானின் திருக்குழல் ஒழுங்கிலும் கடைக்கண் நோக்கிலும் அவன் உள்ளிருக்கும் ஆரா அன்பைக் கோட்சொல்லித் தரும் முறுவலிலும் ஆழங்கால்பட்டு நிற்கின்றோம். பிறிதோரிடத்தில் ஆழ்வார் எம்பெருமான் திருமேனியை, 'மணித்தடத் தடிமலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிகொள் நால்கடங் தோள் தெய்வம்' (மணிதடம் அழகிய தடாகம்; அடி-திருவடி; நால்நான்கு; 22. கம்பரா. பால. உலாவியல்-19 23. திருநெடுந்-21 24. திருவாய் 10.1:1 25. ഒു.--10, 1:9