பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

193


தடையில்லை. ஆனால் அடிக்கடி என்னிடத்தில் இரண்டு பொற்காசுகள் இருக்காதே?” என்று குத்தலாக ஒரு போடு போட்டுவிட்டுப் புறப்பட்டான்.

அவன் புறப்படுகிற சமயத்தில், “கொஞ்சம் பூக்கள் தருகிறேன். உங்கள் இல்லத்துக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று கூறிப் பூக்களை அள்ளினாள் அவள். “அதற்குப் பயனே இல்லை. நான் இன்னும் ஒற்றைக் கட்டைதான்!” என்று கூறி நகைத்தான் நாராயணன் சேந்தன்.

“இன்னுமா உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை ” என்று கிழவர் வியப்புடன் அவனை வினவினார்.

“ஐயா, கிழவரே! உங்கள் மகனைப்போல ஒர் அழகான நல்ல பெண் கிடைக்கிறவரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே ஓரக்கண்ணால் அந்தப் பூக்காரப் பெண்ணை நோக்கினான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.

“வருகிறேன், பெரியவரே!” என்று ஒரு குதிரையில் ஏறிக்கொண்டு இன்னொன்றின் கடிவாளக் கயிற்றைப் பிடித்தவாறே பக்கத்தில் நடத்திக்கொண்டு புறப்பட்டான் சேந்தன்.

வந்தவழியே திரும்பிச் சென்று முன்பு எந்தச் சாலையில் பறளியாற்று வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தளபதியிடம் சொல்லி அவனைச் சுற்றுவழியில் இழுத்தடித் தானோ அதே சாலையில்தான் இப்போது சென்றான் சேந்தன். கூற்றத் தலைவர் கூட்டத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சேந்தனும் அரண்மனைக்குப் போகிறான் போலிருக்கிறது. போகட்டும். அவனுக்கும் முன்பே நேயர்களை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கு நடக்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளைக் காண்பித்துவிட விரும்புகிறேன் நான். திருநந்திக்கரைச் சமணப்பள்ளியில் சேந்தனால் ஏமாற்றப்பட்டு மனம் சோர்ந்து கால்நடையாகக் கிளம்பிய தளபதி வல்லாளதேவனும், ஏமாற்றி விட்டுக் குதிரையில்