பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை

திருநந்திக் கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பிவந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும்போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்றுகொண்டிருந்ததனர். தான் ஏறிவந்த குதிரை, கைப்பற்றிக்கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்புதான் கோட்டைகுள் நுழைந்தான் சேந்தன்.

அரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன.

கோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது.

முதல் வாயிலாகிய பாரந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற்கவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்றுகொண்டிருந்த வீரர்கள்கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு வாயிலை நெருங்கிய போதுதான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும், எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியவந்தது.

அவனுக்குப் பின்புறம் ‘சுரிகை’ எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மெளனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை