பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

229


முடியவில்லை. தோற்றத்திலுள்ள நிலையைக் கொண்டு பார்த்தால் ஏதோ அரசாங்கத் துரதன் மாதிரி இருந்தது. குதிரை அருகில் வந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டாவது ஆளின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் பயத்தோடு சரேலென்று பூந்தோட்டத்தின் அடர்ந்த பசுமைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டான் சேந்தன். கோட்டைக்குள் வந்த குதிரையில் வீற்றிருந்த இரண்டாவது ஆள் வல்லாளதேவன்.


28. நள்ளிரவில் நால்வர்

முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் எதிர்பாராத விதமாகக் கரவந்தபுரத்துத்துதனைச் சந்திக்க நேர்ந்தது இரண்டு வகையில் நன்மையாக முடிந்தது தளபதி வல்லாளதேவனுக்கு. ஒன்று அந்தத் துரதன் கொண்டு வந்திருந்த அதி முக்கியமான அவசரச் செய்தியைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மற்றொரு நன்மை, அரண்மனைக்குப் போவதற்குக் குதிரையில்லையே? என்று கவலைப் பட்டுக்கொண்டிருக்காமல் தூதனுடைய குதிரையிலேயே இருவரும் போய்விடலாம். பசி தீர அறக்கோட்டத்தில் சாப்பிட்டுவிட்டுப் பின்பு அரண்மனைக்குப் புறப்படலாம் என்றுதான் முதலில் தளபதி நினைத்திருந்தான். ஆனால் துரதன் கொண்டு வந்திருந்த செய்தியின் அவசரத்தை அறிந்தபோது பசி, களைப்பு எதுவுமே அவனுக்கு மறந்து போய்விட்டன. தூதனின் குதிரையிலேயே பின்புறமாகத் தா ஏறி உட்கார்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான்.

“மகா சேனாதிபதி எங்களுடைய அறக்கோட்டத்தையும், எங்களையும் இப்படி ஒரேயடியாக அவமதித்து விட்டுப் போவது கொஞ்சம்கூட நன்றாயில்லை. இன்னும் ஓரிரண்டு நாழிகைகள் தங்கி உணவருந்தி எங்கள் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு போகலாமே!” என்று முன்சிறை அறக்கோட்டத்திலுள்ள அண்டராதித்த வைணவனும் அவன் மனைவி கோதையும்