பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

249


இந்தச் சமயத்தில் ஒரு வீரன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து, “மகாமண்டலேசுவரரைத் தேடிக்கொண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து அவசரமாக ஓர் ஆள் வந்திருக்கிறான்” என்று தெரிவித்தான். “அவனை உடனே இங்கு அழைத்துக்கொண்டு வா” என்று உத்தரவிட்டார் மகாமண்டலேசுவரர்.

படகோட்டி அம்பலவன் வேளான் உள்ளே வந்து நின்றான். அவன் முகம் பேயறைபட்டதுபோல் வெளிறிப் போயிருந்தது.

“சுவாமி! மாளிகையில் நடக்கக்கூடாத அநியாயம் நடந்துவிட்டது. எந்தப் பொருள்களை உயிரினும் மேலான வையாகக் கருதிப் பாதுகாத்து வந்தோமோ, அந்தப் பொருள்கள் நேற்றிரவு கொள்ளைபோய்விட்டன. பாண்டிய மரபின் சுந்தர முடியையும் வீர வாளையும் பொற் சிம்மாசனத்தையும் பறிகொடுத்துவிட்டோம். இன்று காலையில் தான் கொள்ளை நடந்தபின் வசந்தமண்டபத்தில் வந்து தங்கியிருந்த இந்தச் சாமி யாரையும், நேற்றுக் காலை அவரைத் தேடிவந்து அவரோடு தங்கியிருந்த ஆட்களையும், தீவின் எல்லையிலேயே கர்ண்வில்லை.” படகோட்டி மூச்சுவிடாமல் கூறிக்கொண்டே போனான். அங்கிருந்தவர்கள் அனைவரும் கல்லாய்ச் சிலையாய்ச் சமைந்து நின்றார்கள்.


31. செம்பவழத் தீவு

இடையாற்று மங்கலம் மாளிகையில் பாண்டிய மரபின் மரியாதைக்குரிய மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போன மறுநாள் அங்கே ஒருவகைப் பயமும் திகைப்பும் பரவிவிட்டன. சாவு நிகழ்ந்த வீடுபோல், மழையைக் கொட்டித் தீர்த்துவிட்ட வானம்போல், ஓர் அமைதி. பறிகொடுக்கக்கூடாத பொருளைப் பறிகொடுத்து விட்டால் ஏற்படுமே, அந்த அமைதி, இடையாற்று மண்டபத்தில் சோகம் கலந்து சூழ்ந்திருந்தது.