பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

309

மாட்டார்களே! இதுவும் என் போதாத காலந்தான்!” மகாராணியின் குரல் தழுதழுத்தது.

“தங்களுக்கு அந்தப் பயம் தேவையில்லை : குமார பாண்டியரின் பெயருக்கு எந்தவிதமான களங்கமும் ஏற்படாமல் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது:”

“மகாமண்டலேசுவரரே! உங்களுக்குத் தெரியாததில்லை. இவ்வளவு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் அவனை நம்பித்தான். மறுபடியும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும். அவனை இந்த நாட்டில் அரசனாக உலாவச் செய்யவேண்டும். என் மகன் காலத்தில் பாண்டிய அரச மரபு இருண்டு அழிந்தது என்ற பழிமொழி எதிர்காலத்தில் வந்து விடக்கூடாதே என்பதுதான் என் கவலை. ஐயோ, இந்தப் பிள்ளை இப்படி என்னென்னவோ செய்யத் தகாததைச் செய்துவிட்டு நெருங்கி வராமல் விலகி ஓடிக்கொண்டிருக்கிறானே?”

பேசிக்கொண்டே வந்த மகாராணி மெல்லிய விசும்பலோடு பேச்சை நிறுத்தினார். கண்களில் கண்ணிர் துளிர்த்துவிட்டது. முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்தபோது வாய்விட்டு அழுதுவிடுவாரோ என்று மகாமண்டலேசுவரர் பயந்தார். அந்தப் பெருந்தேவி உள்ளங் குமுறி அழுத காட்சியைப் பராந்தக பாண்டியர் அமர பதவி அடைந்தபோது ஒரு முறைதான் மகாமண்டலேசுவரர் பார்த்திருக்கிறார். “இந்த அரசப் பெருங்குலத்து அன்னையை எதிர் காலத்தில் இனி என்றும் அழவிடக் கூடாது” என்று அப்போது தம் பொறுப்புடன் எண்ணி வைத்திருந்தார் மகாமண்டலேசுவரர்.

‘'தேவி! இதென்ன ? இப்படித் தாங்களே உணர்ச்சிவசப்படலாமா? யாருடைய கண்ணிரையும் எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்! ஆனால் மகாராணியாகிய தாங்களே கண்ணிர் சிந்தினால் என்ன செய்வது?”

“கண்ணிர் சிந்தாமல் வேறென்ன செய்வது? வடக்கு எல்லையில் 'போர் இதோ வந்துவிட்டது' என்கிறார்கள்.