பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

அன்றைய நிகழ்ச்சிகளிலிருந்து இடையாற்றுமங்கலம் நம்பியைப் பற்றி அதிக முன்னெச்சரிக்கையும், கவனமும் வேண்டுமென்று அவன் தீர்மானத்துக்கு வந்திருந்தான்.

முதலில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனைக் கண்டு அரண்மனைத் தோட்டத்தின் அடர்த்தியான பகுதி ஒன்றுக்குச் சென்று. பேசிக்கொண்டிருந்தான். குழைக்காதன், தளபதி அரண்மனைக்கு வருவதற்குமுன் அங்கு நடந்த சில நிகழ்ச்சிகளில் தான் கண்ட சிலவற்றை விவரமாகக் குறிப்பிட்டுச் சொன்னான்.

“நீங்கள் முன்பு கோட்டாற்றிலிருந்து என்னை அனுப்பியபோது கூறியபடி கூடியவரை மகாமண்ட லேசுவரருடைய கண்ணுக்கு அகப்படாமல்தான் இருக்க முயன்றேன். ஆனால் கடைசியில் அவர் கண்டுபிடித்து விட்டார்.”

"குழைக்காதரே! நீங்கள் நினைப்பதுபோல் அந்த மனிதரை அவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களால் முடிகிறதா இல்லையா என்று சோதிப்பதற்காகவே அப்படிச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கும், எனக்கும் இரண்டு கண்கள் இருந்தால் இரண்டின் பார்வை ஆற்றல்தான் இருக்கும். ஆனால் அவருடைய இரண்டு கண்களுக்கு இருபது கண்களின் ஆற்றல் உண்டு. அப்படி இருந்தும் சில சமயங்கள் அவரைப் பலவீனப்படுத்தி விடுகின்றன!”

‘உண்மை! கூற்றத் தலைவர்கள் கூட்டத்தின்போது அவருடைய ஆற்றலையும், பலவீனத்தையும் சேர்த்தே என்னால் காணமுடிந்தது.”

“அது இருக்கட்டும்! இப்போது நீங்கள் எப்படியாவது அந்தப்புரப் பகுதிக்குச் சென்று என்னுடைய தங்கை பகவதியை இங்கே அழைத்துவர வேண்டும்” என்றான் தளபதி.

இப்போதிருக்கிற சூழ்நிலையில் நான் அந்தப்புரத்துக்குள்