பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


பொருளையும்தான் திருடத் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு அதோடு மனத்தையும் திருடி ஏமாற்றிவிட்டுப் போகத் தெரிகிறது. ஐயா இளவரசே! நீங்கள் கெட்டிக்காரர் என்று உங்கள் மனத்தில் எண்ணமோ ?” -

படபடப்பாகப் பேச்சைக் கொட்டிவிட்டு மறைந்து விட்டது இடையாற்றுமங்கலத்து இளங்குமரியின் மதிமுகம். அப்புறம் சமீ பத்தில் அவன் சந்தித்த, சந்திக்காத, யார் யாருடைய முகமோ, எந்த எந்த இடங்களோ அவன் கண்முன் தெரிந்து மறைந்தன. நாராயணன் சேந்தன், தளபதி வல்லாளதேவன், பகவதி, விலாசினி, ஆசிரியர் பிரான், பவழக்கனிவாயர், இடையாற்றுமங்கலத்துப் படகோட்டி, பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவர் முகமும் அவன் பார்வைக்கு முன்னால் தோன்றி மறைந்து ஏசி இரைந்து, சினந்து பேசுவதுபோல் தோன்றியது. கோட்டை, அரண்மனை, இடையாற்றுமங்கலம், பறளியாறு, வசந்த மண்டபம், குமரிக் கோயில், விழிளும், சுசீந்திரம், மின்னல் மின்னலாக, ஒளிவட்டம், ஒளிவட்டமாக இந்த இடங்கள் அவன் உணர்வுக்குப் புலனாகி மறைந்தன.

எல்லாவற்றுக்கும் இறுதியில் கடல் முடிவற்றுத் தெரிந்த நீர்ப் பிரளயத்தின் மேல் சக்கசேனாபதி அருகில் துணை நின்று ஒரு கப்பலில் அவனை எங்கோ அழைத்துக்கொண்டு போகிறார். செம்பவழத் தீவு, கடைவீதி, மதிவதனி, வலம்புரிச் சங்கு, உயிருக்கு நேர்ந்த ஆபத்து, முதலை வலையில் சுருண்டு தப்பியது-நினைவுகள்-முகை பிறழாமல் ஒவ்வொன்றாகத் தொடருகின்றன. - -

சிரித்துக்கொண்டே மதிவதனி அவனுக்கு முன் தோன்றுகிறாள். அவன் ஆவலோடு எழுந்து ஓடிப் போய் அவள் கொடி உடலைத் தழுவிக்கொள்கிறான். அடடா! அந்த இன்ப அரவணைப்பில்தான் என்ன சுகம்? எலும்பும் தோலும் நரம்பும் இணைந்த மனிதப் பெண்ணின் உடல்போலவா இருக்கிறது. அது? மலர்களின் மென்மையும், அமுதத்தின் இனிமையும், மின்னலின் ஒளியும், கலந்து கவின் பெற்று இளமை ரசம் பூசிய ஒரு கந்தர்வச் சிலை அவள் உடல்! அவன் தழுவலில்