பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


மகாராணிக்கு உன்னுடைய பாடலில் எவ்வளவு ஆசை தெரியுமா?” -

‘போடி, பைத்தியமே ! ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூச் சர்க்கரை மாதிரித்தான். நீயும் நானும். ஏதோ ஆளுக்கொரு கலை அன்ரகுறையாகத் தெரியும், உனக்கும் நாட்டியம் தெரிந்த அளவு பாடத்தெரியாது. எனக்குப் பாடத் தெரிந்த அளவு ஆடத் தெரியாது. எல்லாக் கலைகளும் தெரிந்த பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இடையாற்றுமங்கலத்து நங்கை குழல் வாய்மொழி - அவளை நீயும் நானும் சிறுவயதில் பார்த்தது, இப்போது அவள் எப்படி இருக்கிறாளாம், தெரியுமா? ஆடல், பாடல், பேச்சு, சிரிப்பு, பார்வை, அத்தனையும், அத்தனைக் கலைகளாம் அவளிடம். அவள் இங்கு வந்து மகாராணியோடு ஒரு நான்கு ஐந்து நாட்கள் நெருங்கிப் பழகிவிட்டால் நீயும், நானும், பின்பு இருக்குமிடமே தெரியாது!” - பகவதி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள். திடீரென்று தொடர்பில்லாமல் அவள் இடையாற்று மங்கலம் நங்கையைப் பற்றிப் பேசுவதற்குக் காரணமென்னவென்று விலாசினிக்கு விளங்கவில்லை. அவள் வியப்பு அடைந்தாள்.

“ஏதடி அம்மா? திடீரென்று அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இவ்வளவு பொறாமை?” -

“பொறாமையாவது, ஒன்றாவது? அவளைப் பற்றி இன்றைக்குச் சில செய்திகள் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அதே நினைவு!” என்றாள். -

‘யாரிடத்தில் கேள்விப்பட்டாயோ?” விலாசினி யிடமிருந்து இக்கேள்வியைப் பகவதி எதிர் பார்க்கவே இல்லை. வாய் தவறிப் பேச்சுவாக்கில் தனக்கு இரகசியமாகக் கூறப்பட்டவற்றை வெளிப்படையாக வெளியிட்டுவிட்டதை எண்ணி உதட்டைக் கடித்துக் கொண்டாள். “கொஞ்சம் பொறாமை தலைகாட்டினால் என்னைப் போன்ற ஒரு பெண் எவ்வளவு சாதரணமாக அதைக் காட்டிக் கொண்டு விடுகிறாள்’ என்று தன்னையே கடிந்து கொண்டாள்.