பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

பேசி அரட்டையடிக்கும் நாராயணன் சேந்தன் அன்று அவ்வாறு பேசியது அவள் உள்ளத்தில் உறைத்தது.

வேகமாகக் கீழே இறங்கிப் போய் ஒன்றும் பேசாமல் சினத்தைக் காட்டும் முகக் குறிப்புடன் அவன் முன் நின்றாள். படகோட்டி வேளானும், சில மெய்க்காவல் வீரர்களும் சூழ நின்று பேசிக்கொண்டிருந்த சேந்தன் அவள் அருகில் வந்து நின்றதும் பேச்சை நிறுத்தினான். குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி “அம்மணி! வணக்கம் ... தங்களைத்தான் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். சுற்றத்தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் தவிர்க்கமுடியாத காரணங்களால் மகாமண்டலேசுவரர் அரண்மனையிலேயே தொடர்ந்து தங்க நேரிட்டு விட்டது. ஆனாலும் தாங்கள் இங்கே இப்படியெல்லாம் நடக்க விட்டுவிடுவீர்களென்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. தங்கள் தந்தை அதிகமாகக் கவலைப்படும்படியான சூழ்நிலையைத் தாங்கள் உண்டாக்கியிருக்கிறீர்கள்!”–

குழல்வாய்மொழி புருவங்களுக்கு மேலே நெற்றி மேடு புடைக்க, முகம் சிவக்க கோபத் துடிப்புடன் இரைந்தாள்.

“ஐயோ! போதும், நிறுத்துங்கள், நீங்கள் மிகவும் பெரியவர். எத்தனையோ குடும்பங்களில் எவ்வளவோ தந்தைமார்களுக்கு அறிவுரை கூறிப் பழகியவர். உங்கள் அறிவுரை கிடைக்காததனால்தான் என் தந்தை அநாவசியமாக எனக்குச் செல்லம் கொடுத்துப் பாழாக்கிவிட்டார். இனிமேலாவது அவருக்கு தக்க சமயத்தில் அறிவுரை கூறி எனக்கு செல்லம் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:

அவளிடமிருந்து வார்த்தைகள் வாங்கிக் கட்டிக் கொண்ட நாராயணன் சேந்தன் சிறிது நேரம் அந்தப் பெண்ணின் கோபத்தைப் போக்க வகை தெரியாமல் தயங்கினான். அவளைப்பற்றித் தான் பேசிக் கொண்டிருந்ததைப் படியிறங்கி வரும்போது அவள் கேட்டுக்கொண்டே வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது.

“வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள். நான் சற்றுமுன் தங்களைப் பற்றி இங்கே பேசிக்கொண்டிருந்ததைத் தாங்களும்