பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


பெருகியிருக்கும் அந்த மலர் நெஞ்சத்தை மேலும் வாடவிடுவதற்கு விரும்பவில்லை அவர். எல்லைக் கற்களை உடைக்கிற அளவு வடக்கே பூசல் நடப்பது அவருடைய பொறுமையையே சோதித்தது.

“உன்னிடமும் ஒரு பதில் ஒலை கொடுத்து அனுப்புகிறேன். ஆனால் நீ அதைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு செல்லும்போது இடை வழியில் எங்காவது, யாராவது உன்னிடமிருந்து பறிக்கமுயன்றால், சிரமப்பட்டு அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டாம். தாராளமாக விட்டுக்கொடுத்துவிடு: இடையாற்றுமங்கலம் நம்பி இப்படிக் கூறியபோது வந்திருந்த தூதன் திகைத்துப் போனான். அவனுக்கு அவர் என்ன நோக்கத்தோடு அப்படிச் சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. அவன் விழித்தான். அவரோ சிறிதும் தாமதம் செய்யாமல் பதில் ஒலை எழுதி உறையிலிட்டு அரங்கு இலச்சினை பொறித்து அவன் கையில் கொடுத்துவிட்டார். கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் துரதன் அங்கே அதிகநேரம் தங்கியிருப்பதையே விரும்பாதவர்போல் துரத்தினார். அவனும் புறப்பட்டு விட்டான். அவனை அனுப்பிய பின் மகாமண்டலேசுவரர் சிந்தனையில் மூழ்கினார். அவருடைய சிந்தனையில் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற ஒரே கேள்வி இதுதான்:

“நெருங்கி வந்துகொண்டிருக்கும் போரை இன்னும் சிறிது காலம் பொறுத்துத் தாமதமாக வரச்செய்வதற்கு வழி என்ன?” இந்தச் சில நாட்களுக்குள் எத்தனையோ துன்பங்களையும் அதிர்ச்சிகளையும், தாங்கி அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் உடனுக்குடன் நினைத்து முடிவு செய்திருக்கிறார் அவர், ஆனால், மலைபோல் எழுந்து நிற்கும் இந்தப் பெரிய கேள்விக்கு அவ்வளவு எளிமையாக விடை கண்டுபிடிக்க முடியவில்லை. சிந்தனை பல கிளைகளாய்க் கிளைத்து எங்கெங்கோ சுற்றிப் படர்ந்தது. எத்தனையோ பெரிய படையெடுப்புக்களின் திடுக்கிடத் தக்க நிலைமைகளையெல்லாம் அவர் சமாளித்திருக்கிறார். போரில் வெற்றிகளையும்