பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


என்ன? எப்போதும் வெற்றியடைந்து கொண்டிருக்க முடியுமா? குமாரபாண்டியன் நாடுதோற்றது பெரிதன்று. மனம் தோற்றுப் பயந்து போய் கடல்கடந்து ஓடினானே! அது தான் பெரிய தவறு. அவனுடைய இந்தத் தவறு வடதிசையரசர்களைப் பெரிய அளவுக்கு ஊக்கமுறச் செய்து மேலும் மேலும் படையெடுத்து வரத்துண்டுகின்றது. அவன் நாட்டில் இல்லாமல் எங்கோ மறைந்திருப்பது கூடாதென்று அரியமுயற்சியால் ஈழ நாட்டிலிருந்து வரவழைத்தேன்; வந்தான். அவனை இரகசியமாக மறைத்து வைத்திருந்து என்னென்னவோ செய்ய எண்ணினேன். காலம் வரும்வரை பொறுத்திருந்து சரியான படைபலத்தை உருவாக்கிக் கொண்டு வடபாண்டி நாட்டை மீண்டும் கைப்பற்றியிருக்க முடியும், மகாராணி வானவன் மாதேவியின் இரண்டு பெரிய கனவுகளை நனவாக்கிவிட எண்ணியிருந்தேன். “செந்தமிழ்த் தென்பாண்டி நாட்டின் அரசனாக இராசசிம்மனுக்கு முடிசூட்ட வேண்டும். மணவினை மங்கலம் முடிவெடுக்க வேண்டும்.” -

இராசசிம்மனோ என் திட்டங்களையும் தன் அருமந்த அன்னையின் கனவுகளையும் காற்றில் பறக்கவிட்டுக் கடலைக் கடந்துபோய்விட்டான். நான் சேந்தனிடம் கூறியனுப்பியிருக்கும் திட்டப்படி குழல்வாய்மொழியும் அவனும் இளவரசனைத் தேடிக் கொண்டுவரப் புறப்பட்டிருப்பார்கள். தளபதி வல்லாளதேவன் கோட்டாறிலுள்ள தென்திசைப் பெரும் படையைப் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பான். எப்படியிருந்தாலும் நமக்கு பிறருடைய உதவி வேண்டும். இராசசிம்மன் மனம் வைத்தால் ஈழ நாட்டுக் காசிய மன்னரிடமி ருந்து கூடப் படை உதவி பெற்றுக்கொண்டு வரமுடியும்.

பார்க்கலாம்! எப்படி எப்படி எது எது நடக்கிறதோ? இப்போது செய்யவேண்டிய முதல் வேலை வந்துகொண்டிருக்கிற போரை உடனடியாக வரவிடாமல் தடுப்பது.

மகாமண்டலேசுவரருடைய நினைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. அவர் மனத்தில் தென்பாண்டி நாட்டின்மேல் படையெடுக்கத் துடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக மானசீகத் தோற்றத்தில்