பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


‘அர்ச்சகரே! அவள் நிலையில் யார் இருந்தாலும் அப்படிக் கெஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” மகாராணியிடமிருந்து இந்தப் பதில் கேள்வியை அர்ச்சகர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“வேறொன்றும் செய்ய முடியாதுதான். ஆனால் அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இங்கே வந்திருக்கும் உங்களிடம் மகனைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்?”

“என்ன செய்ய முடியுமோ, அதை இப்போதும் நான் செய்யத்தான் போகிறேன். அர்ச்சகரே! ஆனால் நான்தான் செய்தேன் என்பதை வெளிக்காட்டிக்கொள்ள மட்டும் எனக்கு விருப்பமில்லை.” -

“என்ன செய்யப் போகிறீர்களோ ? அர்ச்சகர் பரபரப்படைந்து வினவினார். -

“நான் செய்யப்போவதில்லை. எனக்காக நீங்களே அதைச் செய்துவிடவேண்டும். இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்துபோனது யாருக்குமே தெரிய வேண்டாம்.”

இப்படிக் கூறிக்கொண்டே தமது வலது கை விரலில் அணிந்திருந்த அரச முத்திரையோடு கூடிய கணையாழி மோதிரத்தைக் கழற்றினார் மகாராணி, அர்ச்சகர், புவன மோகினி இருவருக்கும் விழிகள் ஆச்சரியத்தால் அகன்றன. “கைமுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இருக்கும் தெய்வநீதிமன்றத்துத் தலைவரிடம் இந்த மோதிரத்தைக் காண்பியுங்கள். அந்தத் தாயின் மகன் திருடிய பொன் அணிகலன்களைப் போல் நான்கு மடங்கு பெறுமானமுள்ள பொன்னை அவன் அபராதமாகச் செலுத்தினால் போதும், கைமுக்குத் தண்டனை வேண்டாமென்று நான் கூறியனுப்பியதாகச் சொல்லுங்கள். அந்தத் தாயின் பெருமையைக் காப்பாற்றுவதற்காக அபராதம் விதிக்கப்பெறும் நான்கு மடங்கு பொன்னை நானே அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பிவிடுகிறேன். இது