பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 40?

“மரியாதையாக வெளியில் எடுத்துவிடு ! சுங்கம் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக எந்தப்பொருளை இப்படி இடுப்பில் வைத்து மறைத்து வைத்துக் கட்டிக்கொண்டு போகிறாய்? அவன் மிரட்டினான்.

இரண்டு விலாப்புறமும் வெடித்துவிடும் போல் பெரிதான சிரிப்பை அடக்கிக்கொள்ளச் சிரமமாய் இருந்தது சேந்தனுக்கு. உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நட்மாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதேபோல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப் பார்க்கிற எல்லோரையும் காவற்காரர்களென்று பயப்படுகிறார்கள் என்று சேந்தன் தன் மனத்தில் நினைத்துக்கொண்டான்.

“உண்மையைச் சொல்லப் போகிறாயா? உதைக் கட்டுமா? காவற்காரனுடைய குரலில் கடுமை ஏறியது. கண்களை உருட்டிக் கோபம் தோன்ற விழித்தான் அவன்.

“ஆகா? என்ன அற்புதமான கேள்வி கேட்டாய் அப்பா நீ? உன் கண் பார்வையின் கூர்மையே கூர்மை, உலகத்தில் இதுவரையில் எந்த மன்னருடைய அரசாட்சியிலும் நான் இடுப்பில் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பொருளுக்குச் சுங்கம் கேட்டதில்லை. இத்ோ நன்றாகப் பார்த்துக்கொள்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தன் மேல் அங்கியை விலக்கிக் காட்டினான் சேந்தன்.

தொந்திமுன் தள்ளிய அவன் வயிற்றைப் பார்த்து அந்தக் காவலன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“பூ! வயிறுதானா இவ்வளவு பெரிதாக முன்னால் துருத்திக் கொண்டிருக்கிறது? நான் எதையோ ஒளித்துக் கொண்டு போகிறாய் என்றல்லவா நினைத்தேன்?

“நினைப்பாய் அப்பா! நன்றாக நினைப்பாய்! நீ ஏன் நினைக்கமாட்டாய்? சுயநினைவோடுதான் பேசுகிறாயா, அல்லது அதோ கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் யவனத்து மதுத்தாழியைப் பதம் பார்த்துவிட்டுப் பேசுகிறாயா?” - -

பர. கே. 08