பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


நாழிகைக்குப் பின் கப்பல் மாலுமி வந்து, புறப்படலாமா? என்று கேட்டபோது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். நங்கூரக் கயிற்றை அவிழ்த்துவிட்டதும் கப்பல் மெல்ல நகர்ந்தது. கப்பலுக்கும் கரைக்கும் நடுவே கடலின் பரப்பு அதிகமாகி விரிந்துகொண்டே வந்தது.

“வாருங்கள்! கீழ்த்தளத்தில் நீங்கள் தங்கிக் கொள்வதற்கென்று ஓர் அறையை எல்லா வசதிகளோடும் தனியே ஒழித்து வைக்கச் செய்திருக்கிறேன். அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று குழல்வாய்மொழியைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்றான் நாராயணன் சேந்தன். எந்தக் கப்பலிலும் இருக்கமுடியாத அளவு அலங்கரிக்கப் பட்டு அரசகுமாரிக்கு ஒப்பான ஓர் இளம்பெண் தங்குவதற்குரிய சகல வசதிகளுடனும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே அந்த அறையின் கதவைத் திறந்தான் நாராயணன் சேந்தன்.

கதவைத் திறந்ததும் கலகலவென்று சிரிப்பொலியுடன் அந்த அறைக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது சேந்தனும் குழல்வாய்மொழியும் பேயறைபட்டவர்களைப் போல் முகம் வெளிறிப் போய்த் திகைத்து நின்றார்கள். “நானாகவே இந்தக் கப்பலில் இடம் தேடி எடுத்துக்கொண்டதற்காக என்னை மன்னிக்கவேண்டும். நான் என்ன செய்வேன்? நேர்வழி மூடியிருந்தது. குறுக்கு வழியை நானே திறந்துகொண்டேன்!” பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டவன் போலச் சிரித்துக்கொண்டே கூறினான் அந்த எழில் வாலிபன்.


16. பேசாதவர் பேசினார்

ஏதோ பெரிய காரியத்தைச் சொல்லப் போகிறவர் போல் வலுவில் தன்னைக் கூப்பிட்டனுப்பித் தன் உள்ளங்கையில் கருவேல் முள்ளைக் குத்திய மகாமண்டலேசுவரரின் செயலைக் கண்டு வெளியே பொறுமையாக இருப்பதுபோல் காட்டிக்