பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

433


அவன் பேச்சு நின்றது. வீரர்கள் வாளை உருவி வணங்கி வீரப் பிரமாணம் செய்தனர். “செஞ்சோற்றுக் கடன் கழிப்போம், செய்நன்றி மறவோம்” என்ற சூளுரைக் குரலொலி கடல் ஒலிபோல் எழுந்தது.

தளபதி நின்றுகொண்டிருந்த முரசு மேடைக்கு நேரே படைக் கோட்டத்தின் தலைவாயில் இருந்தது. தற்செயலாக வாயிற்பக்கம் சென்ற பார்வை அங்கே நிலைத்தது தளபதிக்கு. ஆடத்துதவிகள் தலைவன் குதிரையில் கனவேகமாக வந்து இறங்கித் தன்னைத் தேடிப் படைக்கோட்டதுக்குள் நுழைவதைத் தளபதி பார்த்தான். அவன் மனத்தில் ஆவல் துள்ளி எழுந்தது.


19. கருணை வெள்ளம்

காந்தளூர் மணியம்பலத்திலிருந்து இருளில் புறப்பட்ட சிவிகைப் பயணம் தொடர்ந்தது. பல்லக்குத் தூக்குகிறவர் களுடைய துவண்ட நடையையும் வாடித் தொங்கினாற்போல் இருந்த புவனமோகினியின் முகத்தையும் கவனித்தபோது தான் மகாராணிக்குத் தான் செய்துவிட்ட பெருந்தவறு புரிந்தது.

தன் ஒருத்தியோடு போகாமல் காலையில் புறப்பட்டதிலிருந்து அவர்கள் வயிற்றைக் காயப்போட்டு விட்டோமே என்ற உணர்வு அப்போதுதான் அவர் நெஞ்சில் உறைத்தது. அவருடைய மிக மெல்லிய மனம் வருத்தமுற்றது. அரண்மனையிலிருந்து சுசீந்திரத்துக்கும் , சுசீந்திரத்திலிருந்து காந்தளூருக்கும். காந்தளூரிலிருந்து மீண்டும் அரண்மனைக்குமாகப் பல்லக்குத் தூக்கும் ஆட்களை இழுத்தடித்து அலைய வைக்கிறோம் என்ற உணர்வைத் தாங்கிக் கொள்ளக்கூட முடியவில்லை.

‘எனக்குத்தான் ஏதேதோ கவலைகளில் பசியே தோன்றவில்லையென்றால் எல்லோருக்குமா அப்படி இருக்கும்: இதோ இந்த வண்ணமகளின் முகத்தில் பசியின் சோர்வுக்களை