பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி’ 44f

அண்டராதித்தான் வாயிற்புறம் போய்ப் பல்லக்குத் தூக்கிகளை அழைத்துவந்து உட்கார்த்தினான்.

கோதை சோற்றைப் பிசைந்து ஒவ்வொருவருக்கும் இலையில் கொண்டுவந்து வைத்தாள். புவனமோகினிக்குக் கூட அதையே அளித்தாள் அவள். மகாராணிக்கு மட்டும் அந்தப் பழைய சோற்றைக் கொடுக்கவில்லை. பயந்து கூசிப் பேசாமல் இருந்துவிட்டாள். அரண்மனையில் முக்கனிகளும், பாலும், தேனும், நறு நெய்யும், அறுசுவை உண்டிகளும் உண்ணும் மகாராணியிடம் சில்லிட்டுக் குளிர்ந்த பழையசோற்றையும், ஆறிப்போன புளிக் குழம்பையும் எப்படிக் கொடுப்பது? புதிதாகத் தயாரிக்கவும் மகாராணி சம்மதிக்க மாட்டேனென்கிறார்.

குழந்தைகள் உண்பதைக் கருணை ததும்பி வழிந்து அகமும் புறமும் துளும்ப இருந்து காணும் தாய் போல, அவர்கள் உண்பதைப் பார்த்துக்கொண்டே வீற்றிருந்தார் மகாராணி அவர் உள்ளம் நிறைந்தது.

எல்லோரும் உண்டு எழுந்தபின் கோதை சோறு பிசைந்த உண்கலத்தில் ஒரு சிறு தேங்காயளவு பழையசோறு மீதம் இருந்தது. மகாராணி அதைப் பார்த்தார். கோதையை அருகில் கூப்பிட்டு, ‘பெண்ணே! அந்தச் சோற்றை ஓர் இலையில் திரட்டி வைத்து எடுத்துக்கொண்டுவா” என்று கூறினார்.

“தேவி..அது.” ஏதோ சொல்லித் தடுக்க முயன்றாள் கோதை, с - - - “சொன்னால் சொன்னபடி எடுத்துக்கொண்டு வா” என்று அழுத்தமான தொனியில் மகாராணி இடையிட்டுக் கூறியதால் கோதை மறு பேச்சுப் பேச வழியில்லை. அப்படியே இலையில் திரட்டி எடுத்துக்கொண்டு வந்தாள்.

மகாராணி தின்பண்டத்துக்காகக் கையை நீட்டும் ஒரு செல்லக் குழந்தையைப்போல் இரு கைகளையும் நீட்டி ஆசையோடு அந்த இலையை வாங்கிக்கொண்டார். அடுத்த கணம் அவருடைய வலக்கை விரல்கள், இடது கையில் ஏந்திக் கொள்ளப்பட்ட இலையிலிருந்து சோற்றுத்திரளை அள்ளி

வாய்க்குக் கொண்டு போயின.