பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

485


வழக்கமாகிவிட்டது. முடிகிற வரை ஆண்மையும் வீறாப்பும் காட்டுவது, முடியாவிட்டால் பணிந்து அடங்கி விடுவது. மனிதர்கள் பழகிப் பழகி வாழத் தெரிந்து கொண்டுவிட்ட இரகசியம்தான் இந்தப் பணிவு. இதனால்தான் உலகத்தில் உண்மை வீரர்களே குறைந்து விட்டார்கள்” என்று சொல்லிவிட்டுக் குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி, “அம்மணி! நீங்களும் பார்த்துக்கொண்டு தானே நிற்கிறீர்கள்! புலியாக இருந்த பயல் அதற்குள் இப்படிப் பூனையாக மாறிவிட்டான்! இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எதிலுமே உறுதி கிடையாது. அலைபாயும் மனம், அலைபாயும் நினைவுகள், அலைபாயும் செயல்கள்; அதனால்தான் எதிலும் தோல்வி மனப்பான்மையும் நம்பிக்கை வறட்சியும் அடைந்து கெட்டுப் போகிறார்கள். மனத்தை எந்தச் செயலிலும் ஆழமாகக் குவிந்து ஈடுபட விடமாட்டேனென்கிறார்கள். மேலோட்டமான அகலத்தையும் பரப்பையும் பார்த்தே உணர்ச்சி மயமாக வாழ்ந்து அழிகிறார்கள். இதோ இந்த வாலிபனையே எடுத்துக் கொள்ளுங்களேன். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறான். பண்பில் எவ்வளவு மோசமாயிருக்கிறான்!” என்றான் நாராயணன் சேந்தன். - -

குழல்வாய்மொழி தான் சிரிப்பதை நிறுத்திக்கொண்டு அந்த வாலிபனை நோக்கி, “உன் பெயர் என்ன அப்பா?” என்று கேட்டாள். வாலிபன் மனத்தில் எதையோ சிந்திப்பவனைப்போல் சிறிது தயங்கினான். பின் பு குழல்வாய்மொழியைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே “சகோதரி! என் பெயர் கூத்தன்” என்றான். -

“உனக்குப் பொருத்தமான பெயர்தான் தம்பி! சில பேருக்குப் பொருத்தமான பெயர் கிடைப்பதில்லை; இன்னும் சிலர் பெயருக்குப் பொருத்தமாக நடந்துகொள்வதே இல்லை. நீ இரண்டு வகையிலும் கொடுத்துவைத்தவன். கூத்தன் என்ற பெயருக்கு நடிப்பவன் என்று பொருள். நீ நடப்பது, சிரிப்பது, பெண் குரலில் பேசுவது, பயமுறுத்தல், கெஞ்சுதல், உன்னுடைய தோற்றம் எல்லாமே செயற்கையாக நடிப்பது போல் இருக்கின்றன. உன் இயல்போடு ஒட்டியதாகவே தெரியவில்லை.