பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

495


ஏற்படும். அந்த நிலையில்தான் தென்பாண்டி நாட்டின் மாதேவியார் இப்போது இருந்தார்.

ஆனால் அவரது பேரின்ப மோன நிலையைக் கலைக்க அந்த அதிர்ச்சி தரும் ஒலையோடு அன்று காலையில் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் வந்து சேர்ந்தார். தென்பாண்டி நாட்டின் மற்றக் கூற்றத் தலைவர்களெல்லோரும் சேர்ந்து தங்களுடைய ஏகப் பிரதிநிதியாக அந்த ஒலையோடு அவரை மகாராணியாரிடம் அனுப்பியிருந்தனர்.

வைகறையில் நீராடி வழிபாடு முடித்துக்கொண்டு, புனிதமான நினைவுகளில் திளைத்துப்போய் வீற்றிருந்த மகாராணிக்கு முன் புவனமோகினி தோன்றி அந்தச் செய்தியைக் கூறினாள். - -

“தேவி! மிக முக்கியமான காரியமாகப் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் அவசரமாகத் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.” - -- -

“கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து முடிந்த அன்றே அவர்களெல்லாரும் திரும்பிப் போய்விட்டார்களே! இப்போது கழற்கால் மாறனார் மட்டும் மறுபடியும் எதற்காக வந்திருக்கிறார்? தனியாகத்தான் வந்திருக்கிறாரா? அவரோடு வேறு யாராவது வந்திருக்கிறார்களா?’ என்று திகைப்புத்தொனிக்கும் குரலில் மகாராணி வண்ணமகளைப் பார்த்துக் கேட்டார். - ... . -

தேவி! அவர் மட்டும்தான் தனியாக வந்திருக்கிறார்” என்று புவனமோகினி பதில் கூறியதும், “அப்படியானால் நீ ஒன்று. செய், புவனமோகினி! அவரை அழைத்துக்கொண்டு போய் நேரே மகாமண்டலேசுவரர் தங்கியிருக்கும் மாளிகையில் விட்டுவிடு ஏதாவது அரசாங்க சம்பந்தமாகத்தான் பேசுவதற்கு வந்திருப்பார் நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிம்மதியாகத் தெய்வீகச் சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கிற மனத்தை அரசியல் சேறு படவிடுவதற்கு இப்போது நான் சித்தமாயில்லை. திருவாசகத்தையும் திருக்குறளையும் நினைத்துக்