பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கும் நிலையில் தெற்கேயும், வடக்கேயும் யார் படையெடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு புதிய கவலைகளைச் சுமக்கவேண்டாம். எதுவாக இருந்தாலும் சரி; வந்திருப்பவரை மகாமண்டலேசுவரரிடமே போய் விட்டு விடு. அவர் பாடு, வந்திருப்பவர் பாடு. பேசித் தீர்த்துக்கொள்ளட்டும்” என்று ஒட்டுதல் இல்லாமல் கூறினார் மகாராணி வானவன்மாதேவி. х

புவனமோகினி திரும்பிச் சென்றாள். எந்த எந்தப் பற்றுக்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோமோ அந்தந்தப் பற்றுக்களால் வரும் துன்பங்கள் நமக்கு இல்லை’ என்று முன்பொரு நாள் காந்தளூர் மணியம்பலத்தில் கேட்ட அந்தச் சொற்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டார் மகாராணி. நெஞ்சின் சுமையைக் குறைக்க அந்தப் பெருமூச்சை விட்டார் மகாராணி, நெஞ்சின் சுமையைக்குறைத்து அந்தப் பெருமூச்சு வெளியேறினபோது நிம்மதி உள்ளே குடிபுகுந்தாற்போல் இருந்தது. சிறிது நேரந்தான் அந்த நிலை. இரண்டாவதாக மற்றொரு பெருமூச்சை வெளியேற்றும் செய்தியைத் தாங்கிக் கொண்டு புவனமோகினி திரும்பி வந்தாள். “தேவி! அவர் மகாமண்டலேசுவரரைச் சந்திக்க விரும்பவில்லையாம். தங்களைத்தான் சந்தித்துப் பேசியாக வேண்டுமாம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன்; அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக உங்களையே காணவேண்டுமென்கிறார்.”

அவளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவதென்று சிறிது தயங்கியபின், “சரி வேறென்ன செய்ய முடியும்? நீ போய் அவரை இங்கேயே கூட்டிக்கொண்டு வா” என்று சொல்லி அனுப்பினார் மகாராணி. ‘மகாமண்டலேசுவரரைப் பார்க்க விரும்பவில்லை என்று வெறுத்துச் சொல்கிற அளவு சுழற்கால் மாறனாருக்கு அவர் மேல் அப்படி என்ன மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க முடியும் என்ற ஐயம் மகாராணிக்கு ஏற்பட்டது. திடீர் திடீரென்று தம்மைச் சுற்றியிருப்பவர்கள் இருப்பவைகள் எல்லாம் புதிர்களாக மாறிக்கொண்டு வருவதாகப் பட்டது அவருக்கு. உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் கண்ணின் நோக்கத்தில் எப்படிப் படுகிறார்களோ அப்படிக் கருத்தின்