பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


மனிதராக இருந்துகொண்டு சிறிய காரியத்தைச் செய்கிறாரே! பாவம் இவர் என்ன செய்வார்? பதவி ஆசை, பெயர் ஆசை, அதிகார ஆசை மற்றக் கூற்றத் தலைவர்களின் தூண்டுதல் எல்லாம் சேர்ந்து இந்த ஒப்புரவு மொழி மாறா ஒலையோடு இவரை இங்கே அனுப்பியிருக்கின்றன.

கையில் வாங்கிய ஒலையைச் சிறிது சிறிதாக விரித்துக் கொண்டே இவ்வளவு நினைவுகளையும் மனத்தில் ஒடவிட்டுச் சிந்தித்தார் மகாராணி. ஒலையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னால் தலையை நிமிர்த்தி எதிரே நின்று கொண்டிருந்த கழற்கால் மாறனாரை வானவன்மாதேவி கூர்ந்து நோக்கினார். நோக்கிக்கொண்டே கேட்டார்:-இந்த ஓலையை நான் படித்துத்தானாகவேண்டும் என்று நீன் விரும்புகிறீர்களா? நன்றாகச் சிந்தித்து விட்டு என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள், அவசரமில்லை.” மகாராணியாரின் இந்தக் கேள்வியைச் செவியுற்றுக் கழற்கால் மாறனார் சிறிது மிரண்டார். பின்பு சமாளித்துக் கொண்டு கூறினார்:

“மகாராணியவர்கள் உடனடியாக இந்த ஒலையைப் படித்து மகாமண்டலேசுவரருடைய பொறுப்புக்களைக் கைமாற்றி அமைக்கவேண்டுமென்பது என் விருப்பம் மட்டும் இல்லை; எல்லாக் கூற்றத் தலைவர்களும் ஒரு மனத்தோடு அப்படி விரும்பியே என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இதில் இனிமேலும் சிந்திக்க எதுவுமில்லை.”

அவருடைய பதிலைக் கேட்டதும் மகாராணி அந்த ஒலையைப் படிக்கத் தொடங்கிவிட்டார்.

“திருவளர, நலம் வளரக் குமரி கன்னியா பகவதியார் அருள் பரவி நிற்கும் தென்பாண்டி நாட்டின் மகாராணியார் திருமுன்பு பொன்மனையிற் கூடிய கூற்றத் தலைவர்கள் தம்முள் ஒரு நினைவாய், ஒருமனமாய், ஒன்றுபட்டு நிலை நிறுவி நிறைவேற்றி அனுப்பும் ஒப்புரவு மொழி மாறா ஒலை.

“காலஞ்சென்ற மகாமன்னர் நாள் தொட்டு இன்று காறும் நம்முள் தலை நின்று அறிவும், சூழ்ச்சியும் வல்லாராய் மருங்கூர்க் கூற்றத்து முதன்மை பூண்டு இடையாற்று